ஜவாஹிருல்லாஹ் .தமிமுன் அன்சாரியை சந்தித்து உடல் நலம் விசாரிப்பு!

ஜவாஹிருல்லாஹ் .தமிமுன் அன்சாரியை சந்தித்து உடல் நலம் விசாரிப்பு!
சென்னை(22 ஏப் 2017): உடல் நலக்குறைவு காரணமாக சிகிச்சை பெற்று வீடு திரும்பிய மஜக எம்.எல்.ஏ தமிமுன் அன்சாரியை சந்தித்து மமக தலைவர் ஜவாஹிருல்லா உடல் நலம் விசாரித்தார்.
மனித நேய ஜனநயக கட்சியின் பொதுச்செயலாளரும் நாகப்பட்டினம் எம்.எல்.ஏவுமான தமிமுன் அன்சாரிக்கு கடந்த வெள்ளியன்று திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதனை அடுத்து சென்னை காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றார்.
அவரது உடல் நலம் தேறியதை அடுத்து வீடு திரும்பினார். அவருக்கு இரண்டு வார காலம் ஓய்வு தேவை என்று மருத்துவர்கள் அறிவுறுத்தியதை அடுத்து அனைத்து மஜக நிகழ்ச்சிகளும் ரத்து செய்யபட்டுள்ளன.
இந்நிலையில் தகவலறிந்த மனித நேய மக்கள் கட்சி தலைவரும் முன்னள் எம்.எல்.ஏவுமான பேராசிரியர் ஜவாஹிருல்லா தமிமுன் அன்சாரியை சந்தித்து உடல் நலம் விசாரித்தார்.
ஜவாஹிருல்லாஹ் .தமிமுன் அன்சாரியை சந்தித்து உடல் நலம் விசாரிப்பு! ஜவாஹிருல்லாஹ் .தமிமுன் அன்சாரியை சந்தித்து உடல் நலம் விசாரிப்பு! Reviewed by நமதூர் செய்திகள் on 21:24:00 Rating: 5

No comments:

Powered by Blogger.