மனிதக் கேடயமாக பயன்படுத்தியதற்கு ராணுவ வீரர் மீது வழக்கு

மனிதக் கேடயமாக பயன்படுத்தியதற்கு ராணுவ வீரர் மீது வழக்குப்  ...

அண்மையில், காஷ்மீர் பகுதியில் அங்குள்ள எதிர்ப்பாளர்கள் ராணுவ வீரர்கள் மீதும் அவர்களின் வாகனங்கள் மீதும் கல்லெறிந்த சம்பவம் சமூக ஊடகங்களில் பரபரப்பாக பேசப்பட்டது. இந்நிலையில், ஏப்ரல் 9ஆம் தேதி ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் உள்ள ஸ்ரீநகர் மக்களவைத் தொகுதிக்கு இடைத் தேர்தல் நடைபெற்றது. தேர்தலின்போது பாதுகாப்புப் படையினருக்கும் அங்குள்ள எதிர்ப்பாளர்களுக்கும் இடையே மோதல் நடைபெற்றது. இதனால், மிகவும் குறைவாக 6.5 சதவிகித வாக்குகளே பதிவானது.
அப்போது, ராணுவ வீரர்களின் ரோந்து வாகனத்தின் முன்பு ஒரு இளைஞர், மனிதக் கேடயமாகக் கட்டப்பட்டு ரோந்துப் பணியில் ஈடுபட்ட வீடியோ காட்சி ஒன்று வெளியாகி வைரலானது. ராணுவ வீரர்களின் இந்த மனிதஉரிமை மீறலுக்கு மனித உரிமை ஆர்வலர்கள் கண்டனத்தை தெரிவித்தனர். மேலும் இந்த வீடியோ சமூக ஊடகங்களிலும் பரவலாக விவாதிக்கப்பட்டது.
இந்நிலையில், ஸ்ரீநகரில் ராணுவ வீரர்களின் ரோந்து வாகனத்தில் இளைஞர் ஒருவரை மனிதக் கேடயமாகப் பயன்படுத்தியதற்கு பெயர் குறிப்பிடப்படாத ராணுவ வீரர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. ஒருவரை தவறாக சிறைப்பிடித்து தண்டித்தல், கடத்தல் போன்ற குற்றங்களுக்காக ரன்பீர் தண்டனைச் சட்டப்படி ஸ்ரீநகர் காவல்துறை வழக்கு பதிவு செய்துள்ளது. இந்த வழக்கை இணை காவல் கண்காணிப்பாளர் பதவியில் உள்ள காவல்துறை அதிகாரியிடம் விசாரணை நடத்த ஒப்படைக்கப்பட்டுள்ளது.
மனிதக் கேடயமாக பயன்படுத்தியதற்கு ராணுவ வீரர் மீது வழக்கு மனிதக் கேடயமாக பயன்படுத்தியதற்கு ராணுவ வீரர் மீது வழக்கு Reviewed by நமதூர் செய்திகள் on 22:13:00 Rating: 5

No comments:

Powered by Blogger.