குற்ற வழக்கில் சிக்கியவர்கள் பதவி விலக வேண்டும்: கி.வீரமணி

குற்ற வழக்கில் சிக்கியவர்கள் பதவி விலக வேண்டும்: கி.வீரமணி

‘பாபர் மசூதி இடிப்பு வழக்கில் குற்றப்பதிவு செய்யப்பட்ட மத்திய அமைச்சர் உமா பாரதி, ராஜஸ்தான் மாநில ஆளுநர் கல்யாண் சிங் ஆகியோர் பதவி விலக வேண்டும்’ என திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி கூறியுள்ளார்.
குற்றவழக்கில் சிக்கியவர்கள் பதவி விலகுவது தொடர்பாக ஏப்ரல் 21ஆம் தேதி அவர் வெளியிட்ட அறிக்கையில், “1992இல் பாபர் மசூதி இடிக்கப்பட்ட வழக்கில் பாஜக மூத்த தலைவர்கள் எல்.கே.அத்வானி, முரளிமனோகர் ஜோஷி, கல்யாண் சிங், உமா பாரதி, வினய் கட்டியார், வி.எச்.டால்மியா, சாத்வி ரிதம்பரா ஆகியோரிடம் மீண்டும் விசாரணை நடத்த வேண்டும் என கடந்த ஏப்ரல் 18ஆம் தேதி உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது. பாபர் மசூதி இடிக்கப்பட்டு 25 ஆண்டுகள் கடந்துவிட்ட நிலையில் இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட அத்வானி, ஜோஷி போன்றவர்கள் மத்திய அமைச்சர்களாக இருந்துள்ளனர். உமா பாரதி தற்போதும் மத்திய அமைச்சராக உள்ளார். கல்யாண் சிங் ராஜஸ்தான் மாநில ஆளுநராக இருக்கிறார்.
எனவே, குற்ற வழக்குகளில் சிக்கியுள்ள உமா பாரதி, கல்யாண் சிங் ஆகியோர் உச்சநீதிமன்றத் தீர்ப்பையடுத்து தங்களது பதவிகளை ராஜினாமா செய்ய வேண்டும். இதுகுறித்து, மற்ற கட்சிகளுக்கு அறிவுரை கூறும் பிரதமர் நரேந்திர மோடி, தங்கள் கட்சியில் இருக்கும் இவர்கள் இருவரையும் ராஜினாமா செய்ய வலியுறுத்த வேண்டும்” என்று கி.வீரமணி கூறியுள்ளார்.
குற்ற வழக்கில் சிக்கியவர்கள் பதவி விலக வேண்டும்: கி.வீரமணி குற்ற வழக்கில் சிக்கியவர்கள் பதவி விலக வேண்டும்: கி.வீரமணி Reviewed by நமதூர் செய்திகள் on 21:20:00 Rating: 5

No comments:

Powered by Blogger.