உலகப் புத்தக தினம்!

உலகப் புத்தக தினம்!

1995ஆம் ஆண்டு நடைபெற்ற யுனெஸ்கோவின் 28ஆவது மாநாட்டில் ஏப்ரல் 23-ஆம் அன்று உலகப் புத்தக தினமாகக் கொண்டாடுவது என்று முடிவு செய்யப்பட்டது.
♦ இலக்கிய மேதை ஷேக்ஸ்பியரின் பிறந்த தினமான ஏப்ரல் 23 அன்று புத்தக தினம் கொண்டாடுவதைப் பொருத்தமான ஒரு விஷயமாக யுனெஸ்கோ மாநாடு கருதியது.
♦ உலக இலக்கியத்துக்கான ஒரு குறியீடாகவே இந்நாள் தெரிவு செய்யப்பட்டதாக யுனெஸ்கோ தெரிவித்துள்ளது.
♦ உலகம் முழுவதிலும் உள்ள பல்வேறு கலாசாரங்களைப் பற்றி விழிப்பு உணர்வு பெறுவதற்குப் புத்தகம் ஒரு சிறந்த கருவியாக விளங்குகிறது. விதைக்குள் விருட்சம் போல் ஒரு சமூகத்தின் எழுச்சிக்கான கருத்துகளை சில புத்தகங்கள் தன்னுள் கொண்டிருக்கின்றன.
♦ ஒரு கோடி ரூபாய் கிடைத்தால் என்ன செய்வீர்கள் என்று காந்தியடிகளிடம் கேட்டபோது ஒரு நூலகம் கட்டுவேன் என்று பதிலளித்தார்.
♦ காகிதங்களில் அச்சடிக்கப்பட்டு தொகுக்கப்பட்ட தொகுப்பு அல்ல. நேற்றைய செய்தியை இன்றைய இளைய சமுதாயத்தினருக்கு கொண்டுபோய் சேர்க்கும் வழிகாட்டியாக நூல் விளங்குகிறது. அதனால்தான் அழகாக சொல்வார்கள் நேற்றைய செய்தி இன்றைய வரலாறு!
♦ புத்தகங்களுக்கும் நமக்குமான உறவு பள்ளிகளில் தொடங்கினாலும், பள்ளிகளிலேயே முடிவதில்லை... நம் ஆயுள் வரை தொடர்கிறது. எந்த காலகட்டத்திலும் நம்மைக் கைவிடாத ஒரே தோழனாக தோளோடு தோளாக கூடவ வருவது, புத்தகம் மட்டுமே. புத்தகங்கள் நமக்கு அளிக்கும் அற்புதங்கள் ஏராளம். ஒவ்வொரு புத்தகமும் நாம் அறியாத பல கதவுகளைத் திறக்கிறது.
♦ கியூபா புரட்சியை எடுத்துக் கொண்டால் சேகுவேராவின் உள்ளத்தை பிசைந்து ‘சே’வைப் புரட்சியை நோக்கி பயணிக்க வைத்த பெருமை புத்தகங்களுக்கு மட்டுமே உண்டு. அதனால்தான் ‘சே’ தனது கெரில்லா தாக்குதலில் மரங்களின் கிடுக்குகளிலும், மறைவான இடங்களிலும் மறைந்திருந்தபோதுகூட வாசிப்பை தொடர்ந்தார்.
♦ ஒரு புத்தகத்தை நாம் படிக்கும்போது நமது கற்பனைவளம் அதிகரிக்கிறது. நமது சிந்திக்கும் ஆற்றல் அதிகமாகிறது. ஒரு புத்தகத்தை ஒவ்வொரு முறையும் படிக்கும்போதும் நமக்கு புதிய அனுபவம் கிடைக்கிறது. புத்தகம் அட்சய பாத்திரம் போலவே நமக்கு படிக்க படிக்க இன்பத்தைக் கொடுக்கிறது.
♦ எத்தனையோ சாதனையாளர்கள் உருவானதற்கும், இன்று உருவாகிக் கொண்டிருப்பதற்கும் புத்தகங்களே முக்கயமான காரணமாக இன்னும் உள்ளது. நிறைய வரலாறுகள் புத்தகத்தால் மாற்றி எழுதப்பட்டுள்ளது.
♦ பணத்தால் நிலையான மகிழ்ச்சியையும், நிலையான அமைதியையும் தர முடியாது. ஆனால், ஒரு புத்தகம் தரும்.
♦ ‘துப்பாக்கிகளை விட பயங்கரமான ஆயுதங்கள் புத்தகங்கள்’என்று கூறி இருக்கிறார் மார்ட்டின் லூதர்கிங்.
♦ வாழ்க்கையைப் புத்தகத்தோடு கொண்டாடுவோம்!
- வீரசோழன் க.சோ.திருமாவளவன்
உலகப் புத்தக தினம்! உலகப் புத்தக தினம்! Reviewed by நமதூர் செய்திகள் on 21:10:00 Rating: 5

No comments:

Powered by Blogger.