13 கோடி மக்களின் ஆதார் விவரம் லீக்!
மத்திய அரசின் பல்வேறு நலத் திட்டங்களைப் பெற ஆதார் கட்டாயமாக்கப்பட்டு வருவதால், நாள்தோறும் சர்ச்சைகள் எழுந்து வருகிறது. எனினும், நலத் திட்டங்களைப் பெற மக்கள் ஆதார் எண்களைப் பதிவு செய்து வருகின்றனர்.
இந்நிலையில், நலத் திட்டங்களை மேற்பார்வையிடுவதற்காக உருவாக்கப்பட்ட நான்கு அரசாங்க இணையதளங்களில் 13 கோடி மக்களின் ஆதார் எண்கள் மற்றும் 10 கோடி வங்கிக் கணக்கு எண்கள் யாரும் எளிதில் பயன்படுத்தும்வகையில் உள்ளது என இணையம் மற்றும் சமூகத்துக்கான மையம் நேற்று (மே,1) வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வங்கிகள் பயன்பாடு, வேலைவாய்ப்பு உள்ளிட்ட மத்திய அரசின் பல்வேறு திட்டங்களுக்காக ஆதார் எண்கள் பதிவு செய்யப்படுகின்றன. இந்நிலையில், தேசிய வேலைவாய்ப்பு உறுதித் திட்டம் உள்ளிட்ட திட்டங்களில் ஆதார் எண்கள் பயன்படுத்தப்பட்டு வரும் 13 கோடி ஆதார் எண்கள் இணையத்தில் எளிதில் மற்றவர்கள் பயன்படுத்தும்வகையில் உள்ளது.
இதைப் பயன்படுத்தி பொருளாதாரக் குற்றங்களில் ஈடுபட முடியும். கடந்த 2 வாரங்களுக்கு முன்பு, சட்ட விரோதமாக ஆதார் தகவல்களை திருடியதாக 8 இணையதளங்கள் மீது ஆதார் ஆணையம் டெல்லி காவல்துறையில் புகார் அளித்தது. அதைத் தொடர்ந்து, போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
அதைத் தொடர்ந்து, தனி நபர்களின் ஆதார் தகவல்களை திருடும் நபர்களுக்கு 3 ஆண்டு சிறைத் தண்டனை வழங்கப்படும். மாநில அரசுகளின் பல்வேறு துறைகளில் இயங்கும் இணையதளங்களை ஆய்வு செய்து தனி நபர்களின் ஆதார் எண், வங்கிக் கணக்கு விவரங்கள் ஆகியவை கசிகிறதா என்பதை கண்காணித்து, நடவடிக்கை எடுக்க வேண்டும் என மத்திய அரசு எச்சரிக்கை விடுத்தது.
இதுவரை, நாடு முழுவதும் 113 கோடிப் பேருக்கு ஆதார் எண் வழங்கப்பட்டுள்ளது. கடந்த மார்ச் மாதம், கிரிக்கெட் வீரர் மகேந்திர சிங் தோனியின் ஆதார் விவரங்களை வெளியிட்டதற்காக ஆதார் பதிவு நிறுவனம் பதிவுநீக்கம் செய்யப்பட்டது.a
13 கோடி மக்களின் ஆதார் விவரம் லீக்!
Reviewed by நமதூர் செய்திகள்
on
22:02:00
Rating:
No comments: