நீதிபதிகளுக்கிடையேயான மோதலில் குடியரசுத் தலைவர் தலையிட வேண்டும்:பாப்புலர் ஃப்ரெண்ட்!
சென்னை(03 மே 2017): நீதிபதி கர்ணன் மற்றும் உச்ச நீதிமன்ற நீதிபதிகளுக்கிடையே நடைபெறும் மோதலில் குடியரசுத் தலைவர் பிரணப் முகர்ஜி தலையிட்டு தீர்வு ஏற்படுத்த வேண்டும் என்று பாப்புலர் ஃப்ரெண்ட் தேசிய தலைவர் இ.அபூபக்கர் கோரிக்கை வைத்துள்ளார்.
இதுகுறித்து பாப்புலர் ஃப்ரண்ட் வெளியிட்டுள்ள குரிப்பில், நீதிபதி சி.எஸ்.கர்ணன் மற்றும் நீதித்துறை இடையே நடைபெற்றுவரும் அநாகரிகமான மோதலில் மேதகு ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி தலையிட வேண்டும். இந்த விவகாரம் துரதிருஷ்ட நிலைக்கு சென்றுள்ள நிலையில் இந்திய நீதித்துறையை பாதிக்கவே செய்யும். உயர்நீதி மன்ற நீதிபதி ஒருவருக்கு மனநிலை சோதனை நடத்த வேண்டும் என்ற உச்சநீதி மன்றத்தின் சமீபத்திய உத்தரவுகள் நிலைமையை மோசமாக்கி, நீதித்துறையின் தரத்தை தாழ்த்தியுள்ளன.
இந்த வழக்கு இரு பிரிவினருக்கு இடையிலான தனிப்பட்ட பிரச்சனையாகவே தெரிகிறது. மேலும் இவ்வாறு பிறப்பிக்கும் உத்தரவுகளினால் இந்த வழக்கில் அறிவார்ந்த முடிவை எதிர்பார்க்க முடியாது என்பதையும் சுட்டிக் காட்டுகின்றன. தன் மீது சாதி பாகுபாடு காட்டப்படுகிறது என்ற நீதிபதி கர்ணனின் குற்றச்சாட்டுகளின் மீது நடுநிலையான விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும். இந்த வழக்கில் மேதகு ஜனாதிபதி தலையிட்டு ஒரு மரியாதைக்குரிய முடிவிற்கு கொண்டு வர வேண்டும் என்று பாப்புலர் ஃப்ரண்ட் கேட்டுக் கொள்கின்றது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
நீதிபதிகளுக்கிடையேயான மோதலில் குடியரசுத் தலைவர் தலையிட வேண்டும்:பாப்புலர் ஃப்ரெண்ட்!
Reviewed by நமதூர் செய்திகள்
on
21:59:00
Rating:
No comments: