மீண்டும் மாணவர்களின் புரட்சி வெடிக்கும்:ராமதாஸ்
மத்திய அரைசுடன் மாநில அரசு காட்டும் இணக்கத்தால் நீட் தேர்வை தடுக்கும் சட்டத்துக்கு தமிழக அரசு ஒப்புதல் பெறவில்லை.என்று பா.ம.க நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
மருத்துவக் கல்லூரி மாணவர் சேர்க்கைக்கான தேசியத் தகுதி மற்று நீட் தேர்விலிருந்து தமிழகத்திற்கு விலக்கு பெறுவதற்கான முயற்சிகள் தோல்வியடைந்ததையடுத்து நாளை நாடு முழுவதும் இத்தேர்வு நடைபெற உள்ளது.இத்தேர்வினால் கிராமப்புற மாணவர்கள் அதிகம் பாதிக்கப்படுகின்றனர்.அது மட்டுமில்லாமல் நீட் தேர்வுக்கு திட்டமிட்டே பிரச்சாரம் செய்வது கண்டிக்கத்தக்கது ஆகும்.மருத்துவ படிப்பிற்கு என ஒரு பொது நுழைவுத் தேர்வு வேண்டும்.இதனால் கிராமப்புற மாணவர்கள் பாதிக்கப்பட மாட்டார்கள் என்று சில கல்வியலாளர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இதனால், நீட் தேர்வானது , யாருடைய சார்பிலோ திணிக்கப்படுகின்றன என்பதை மட்டும் புரிந்து கொள்ளமுடிகிறது. தமிழ் நாட்டில் 1984 முதல் 2006 வரை 23 ஆண்டுகள் மட்டுமே நுழைவுத்தேர்வின் அடிப்படையில் மருத்துவ மாணவர் சேர்க்கை நடைபெற்றது. இந்தக் காலத்தில் மருத்துவப் பட்டம் பெற்று வல்லுநராக உருவெடுத்தவர்களை விட, அதற்கு முந்தைய காலங்களில் மருத்துவப் பட்டம் பெற்று வல்லுநர்களாக உருவெடுத்தவர்கள் அதிகம் என்பதிலிருந்தே, நீட் தேர்வு தரமான மருத்துவர்களை உருவாக்கும் என்பது வெறும் கண்துடைப்பு நாடகம் என்பதை உணர்ந்து கொள்ள முடியும்.
நீட் தேர்வினால் கிராமப்புற மாணவர்கள் பாதிக்கப்பட மாட்டார்கள் எனப் பல கல்வியாளர்கள் கூறுகின்றனர். நகர்ப் புறங்களில் பயிலும் வசதியான மாணவர்கள் புகழ் பெற்ற பள்ளிகளில் பயில்கிறார்கள். ஏராளமான பள்ளிகளில் நீட், ஐ.ஐ.டி கூட்டு நுழைவுத் தேர்வு ஆகியவற்றுக்கு பயிற்சியளிக்கவும் சேர்த்து ஆண்டு கல்விக் கட்டணமாக ரூ.5 லட்சம் வரை வசூலிக்கப்படுகிறது. தவிர மேலும் பல லட்சம் கட்டணம் செலுத்தி தனியாகவும் பயிற்சி எடுத்துக் கொள்கின்றனர்.
இவர்களையும், எந்த வசதியும் இல்லாத அரசுப் பள்ளிகளில் பகுதி நேரமாக பணியாற்றிக் கொண்டும், குடும்பத் தொழிலை கவனித்துக் கொண்டும் படிக்கும் மாணவர்களையும் ஒரே போட்டித் தேர்வை எழுத வைப்பது எப்படிச் சரியானதாக இருக்க முடியும்.எனவே, நீட் தேர்வு என்பது சமூக நீதிக்கு எதிரான ஒன்றாகும்.
தமிழகத்தில் மதுக்கடைகளைத் திறப்பதையும், ஊழல் செய்வதையும் மட்டுமே முழு நேரத் தொழிலாக கொண்டிருக்கும் அதிமுக பினாமி அரசு, மத்திய அரசை பகைத்துக் கொள்ள விரும்பாததால் தான் நீட் தேர்விலிருந்து விலக்கு பெறுவதற்கான சட்டத்திற்கு குடியரசுத் தலைவரின் ஒப்புதலைப் பெறாமல் விட்டு விட்டது. அதன்மூலம் மருத்துவக் கல்வியில் சமூக நீதிக்குச் சவக்குழி தோண்டப்பட்டிருக்கிறது.
மே 7 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை(நாளை) நடைபெறும் நீட் தேர்வில் தமிழகப் பாடத் திட்டத்தை பயிலும் மாணவர்களுக்கு மிகப்பெரிய பாதிப்பு ஏற்படுவது தவிர்க்க முடியாதது. தமிழ்நாட்டில் மொத்தமுள்ள மருத்துவப் படிப்பு இடங்களில் 90 விழுக்காடு இடங்களை மத்தியப் பாடத்திட்ட மாணவர்கள் கைப்பற்றி, தமிழ் நாடு மாநிலப் பாடத் திட்ட மாணவர்கள் பொதுத் தேர்வில் 99.90 சதவீதம் மதிப்பெண் பெற்றும், இடம் கிடைக்காமல் ஏமாந்து நிற்கும் போது தான் சமூகநீதி சதி செய்து வீழ்த்தப்பட்டது தெரியும். அப்போது மாணவர்கள் புரட்சி வெடிக்கும்'.என்று, அறிக்கை வெளியிட்டுள்ளார்.
மீண்டும் மாணவர்களின் புரட்சி வெடிக்கும்:ராமதாஸ்
Reviewed by நமதூர் செய்திகள்
on
22:16:00
Rating:
No comments: