காங்கிரஸுடன் கூட்டணி தொடரும்: அகிலேஷ் யாதவ்
‘வருகின்ற 2019 நாடாளுமன்றத் தேர்தலை காங்கிரஸுடன்தான் கூட்டணி வைத்து சமாஜ்வாடி எதிர்கொள்ளும்’ என அகிலேஷ் யாதவ் தெரிவித்துள்ளார்.
அண்மையில் நடைபெற்ற உத்தரப்பிரதேச தேர்தலில் சமாஜ்வாடி கட்சி காங்கிரஸுடன் இணைந்து தேர்தலைச் சந்தித்தது. இந்தத் தேர்தலில் பாஜக வெற்றிப்பெற்று ஆட்சியைப் பிடித்தது. சமாஜ்வாடி கட்சி வெறும் 47 இடங்களை மட்டுமே கைப்பற்றியது. உ.பி-யில் பலமாக இருந்த சமாஜ்வாடி கட்சியின் தோல்விக்கு அகிலேஷின் தவறான தேர்தல் முடிவுகளும் காங்கிரஸுடன் கூட்டணி வைத்ததும்தான் காரணம் என அகிலேஷின் தந்தை முலாயம்சிங் யாதவ் விமர்சித்தார்.
இந்நிலையில், மே 9ஆம் தேதி செவ்வாய்க்கிழமை (நேற்று) சமாஜ்வாடி தலைவரான அகிலேஷ் யாதவ் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது: “வருகின்ற 2019ஆம் ஆண்டு நடைபெறும் நாடாளுமன்றத் தேர்தலிலும் காங்கிரஸுடன் எங்களின் கூட்டணி தொடரும். மேலும், தேர்தல் தோல்விக்குப் பின்னர் முதன்முறையாக தனது அடுத்த கட்ட அரசியல் திட்டம் பற்றியும் நாங்கள் அறிவிப்போம்” என்று அவர் தெரிவித்தார்.
காங்கிரஸுடன் கூட்டணி தொடரும்: அகிலேஷ் யாதவ்
Reviewed by நமதூர் செய்திகள்
on
00:27:00
Rating:
No comments: