கொய்யாப்பழம் சாப்பிட்டால் ஏற்படும் நன்மைகள்!
பொதுவாக கோடைக்காலங்களில் மக்கள் வெளியில் சென்றுவிட்டு வீடு திரும்புவதற்குள் சோர்வடைகின்றனர். மேலும், கோடைக்காலங்களில் மலச்சிக்கல் பிரச்னை அதிகமாக இருக்கும். இவற்றை தவிர்க்க எளிதான பல வழி முறைகள் உள்ளன.
அதன்படி, தினமும் ஒரு கொய்யாப்பழத்தைச் சாப்பிட்டு வந்தால், உடல்சூடு தணிந்து குளிர்ச்சி அடையும். உடல் நன்கு வளரவும், எலும்புகள் பலம் பெறவும் கொய்யாப்பழம் உதவும். ஏனெனில் கொய்யாப்பழத்தில் வைட்டமின் சி, வைட்டமின் பி, கால்சியம், மாக்னீஷியம், பாஸ்பரஸ், இரும்பு சத்துக்கள் நிறைந்துள்ளன. இது சருமத்துக்கு மிகவும் நல்லது. முக்கியமாக முகத்துக்குப் பொலிவைத் தருவதுடன் தோல் வறட்சியை நீக்கி பளபளப்புடன்கூடிய இளமைத் தோற்றத்தைத் தருகிறது. கொய்யாப்பழத்தை நறுக்கி சாப்பிடாமல் அப்படியே சாப்பிட்டால் பற்கள் மற்றும் ஈறுகள் வலுவடையும். தினமும் ஒரு கொய்யாப்பழத்தை சாப்பிடுவதன் மூலம் நோய் எதிர்ப்புச்சக்தியை அதிகரிக்கலாம். நீரிழிவு பிரச்னை உள்ளவர்கள் கொய்யாப்பழத்தை சாப்பிட்டு வந்தால், ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவைக் கட்டுப்படுத்த முடியும். ஒரு நாளுக்கு இரண்டு கொய்யாப்பழங்கள் சாப்பிடுவதன் மூலம் மலச்சிக்கலைப் போக்கலாம். மேலும், கொய்யா இலைகள் மூலம் தயாரிக்கப்படும் கஷாயம் இருமல், தொண்டை மற்றும் இதயச் சம்பந்தமான நோய்களுக்குத் தீர்வு தருகிறது. வேறு எந்தப் பழத்திலும் இல்லாத வைட்டமின் சி என்ற உயிர்ச்சத்து இப்பழத்தில் அதிக அளவில் உள்ளதால் வளரும் குழந்தைகளுக்குக் கொய்யாப்பழம் ஒரு வரப்பிரசாதமாகும். அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சு. எனவே, கொய்யாப்பழத்தை அளவாக சாப்பிடுவது நல்லது. அதிகமாக சாபிட்டால் வாதம், பித்தம் அதிகமாகி தலைச்சுற்றல் ஏற்படும்.
கொய்யாப்பழம் சாப்பிட்டால் ஏற்படும் நன்மைகள்!
Reviewed by நமதூர் செய்திகள்
on
00:25:00
Rating:
No comments: