நீட் தேர்வு தமிழகம் விலக்கு : யார் சொல்வது உண்மை?
நீட் தேர்வில் இருந்து விலக்கு கோரி தமிழக அரசு தங்களை அணுக வில்லை எனக் குடியரசு தலைவர் அலுவலகம் தெரிவித்துள்ளது. நீட் விவகாரம் குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த மாநிலங்களவை உறுப்பினர் டி.கே.ரங்கராஜன் விளக்கம் கேட்டிருந்தார். அவருக்குக் குடியரசு தலைவர் மாளிகை அறிவித்துள்ள விளக்கத்தில் நீட் தேர்வில் இருந்து விலக்கு கோரி தமிழக அரசு சார்பில் எந்தச் சட்ட முன்வடிவும் வரவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் நாளை நடைபெறவுள்ள நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிப்பதற்கான அனைத்து நடவடிக்கையும் எடுக்கப்பட்டுள்ளதாகப் பள்ளிக்கல்வி துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்கும் சட்ட முன்வடிவு பிப்ரவரி மாதம் சட்டமன்றத்தில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. இதற்குக் குடியரசு தலைவர் ஒப்புதல் அளிக்கவேண்டும். இந்த விவகாரம் குறித்தே டி.கே.ரங்கராஜன் விளக்கம் கேட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் அப்படியொரு சட்ட முன் வடிவுவே தமிழக அரசிடம் இருந்து எங்களுக்கு வரவில்லை என்று குடியரசுத் தலைவர் மாளிகை தரப்பு கூறியுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உண்மையிலேயே தமிழக அரசு நீட் தேர்வில் இருந்து விலக்கு கோரிய சட்ட முன் வடிவை குடியரசுத் தலைவர் மாளிகைக்கு அனுப்பியதா? அனுப்பியது என்றால் அது எங்கே போனது? என்ற கேள்விகள் எழுவதைத் தவிர்க்க முடியவில்லை.
நீட் தேர்வு தமிழகம் விலக்கு : யார் சொல்வது உண்மை?
Reviewed by நமதூர் செய்திகள்
on
22:20:00
Rating:
No comments: