இந்திய ஹாக்கி ஜாம்பவான் முகமது ஷாஹித் மரணம்

இந்திய ஹாக்கி அணியின் முன்னாள் முன்னனி வீரரான முகமது ஷாஹித் மரணமடைந்தார்.


 

 
1980-ம் ஆண்டு மாஸ்கோ நகரில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியில் இந்திய ஹாக்கி அணியின் முன்னாள் வீரர் ஜாம்பவான் முகமது ஷாஹித் பங்கேற்ற இந்திய அணி தங்கப்பதக்கத்தை வென்றது. பின்னர் 1986-ம் ஆண்டு நடைபெற்ற ஆசிய விளையாட்டுப் போட்டியில் இவரது தலைமையின்கீழ் வெண்கலப் பதக்கத்தையும் வென்று நாட்டுக்கு பெருமை சேர்த்தது.
 
தற்போது 56 வயதாகும் ஷாஹித், மஞ்சள் காமாலை மற்றும் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட நிலையில் குர்கான் நகரில் உள்ள மெடென்ட்டா ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
 
இந்நிலையில், முஹம்மது ஷாஹித்(56) சிகிச்சை பலனின்றி இன்று காலை 10.45 மணியளவில் மரணம் அடைந்தார். அவரது சொந்த ஊரான வாரணாசியில் உடல் அடக்கம் செய்யப்படும் என்று அவரது மகன் குறிப்பிட்டுள்ளார்.
இந்திய ஹாக்கி ஜாம்பவான் முகமது ஷாஹித் மரணம் இந்திய ஹாக்கி ஜாம்பவான் முகமது ஷாஹித் மரணம் Reviewed by நமதூர் செய்திகள் on 04:51:00 Rating: 5

No comments:

Powered by Blogger.