ஆர்.எஸ்.எஸ் நிதி விவரம் வெளியிட வேண்டும்: திக்விஜய் சிங்


காங்கிரஸ் கட்சியின் மூத்தத் தலைவர்களுள் ஒருவரான திக்விஜய் சிங்கின் கருத்துக்கு எப்போதுமே முக்கியத்துவம் உண்டு. காங்கிரஸ் தலைமையின் கருத்தோடு முரண்பட்டு கருத்துகள் வெளியிட்டாலும் கட்சியிலும் சரி, வெளியிலும் சரி திக்விஜய் சிங்கின் கருத்து பரவலாக கவனம் பெறும் நிலையில், நேற்று மாலை டெல்லியில் நடந்த காங்கிரஸ் ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்திற்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய திஜ்விஜய் சிங், ஆர்.எஸ்.எஸ் அமைப்பு பற்றிய கருத்துக்களை வெளியிட்டுள்ளார்.
“இந்தியாவில் பதிவே செய்யப்படாத ஆர்.எஸ்.எஸ். அமைப்புக்கு ஆண்டுதோறும் வரும் கோடிக்கணக்கான நிதி எங்கிருந்து வருகிறது என்பதை வெளிப்படுத்த வேண்டும். பதிவு செய்யப்படாத அமைப்பை தடைசெய்யும் கேள்வியே இல்லை. ஆர்.எஸ்.எஸ். அமைப்புக்குத் தடை தொடர்பாக நீங்கள் அதிக முறை கேட்டுள்ளீர்கள். உங்களுக்கே தெரியும் ஆர்.எஸ்.எஸ். இயக்கம் பதிவு செய்யப்படாதது என்று. அவர்கள் (ஆர்.எஸ்.எஸ்) குரு பூர்ணிமா அன்று அதிகளவு பணத்தை வசூலித்து உள்ளனர். அனைத்தும் கணக்கில்லாமல் செல்கிறது. குருதட்சணையாக எவ்வளவு பணம் வந்தது? பணம் கணக்கில் வருகிறதா? பதிவு செய்யப்படாத அமைப்பான ஆர்.எஸ்.எஸ். எந்த ஒரு சட்டத்தின் கீழும் வராது. இந்தப் பணம் எங்கே செல்கிறது? விவரத்தை ஆர்.எஸ்.எஸ். வெளியிடவேண்டும்” என்று திக்விஜய் சிங் கூறி உள்ளார். இந்தியா முழுக்க பல்வேறு இந்து அமைப்புகள் பசுக்கள் தொடர்பான சர்ச்சையில் இறங்குவதோடு இறைச்சிக்காக மாடுகளை எடுத்துச் செல்கிறவர்களை ஆங்காங்கே தாக்கியும் வருகின்றனர். இது தொடர்பாகவும் கேள்வி எழுப்பியுள்ளார் திக்விஜய் சிங்.
ஆர்.எஸ்.எஸ் நிதி விவரம் வெளியிட வேண்டும்: திக்விஜய் சிங் ஆர்.எஸ்.எஸ் நிதி விவரம் வெளியிட வேண்டும்: திக்விஜய் சிங் Reviewed by நமதூர் செய்திகள் on 22:48:00 Rating: 5

No comments:

Powered by Blogger.