அகிலேசும் நானும்: ராகுல்

ராகுல் காந்தியும், நானும் ஒரு சைக்கிளின் இரு சக்கரம் போன்றவர்கள் என உத்தரபிரதேச மாநில முதலமைச்சர் அகிலேஷ் யாதவ் கூறியுள்ளார்.

உத்தரப்பிரதேச மாநில சட்டசபைத் தேர்தல் 7 கட்டங்களாக நடைபெறுகிறது. உ.பி.யில் முதல்கட்ட தேர்தல் பிப்ரவரி 11-ம் தேதியும், இரண்டாம் கட்ட தேர்தல் பிப்ரவரி 15-ம் தேதியும் நடைபெறுகிறது. மாநிலத்தில் ஆளும் சமாஜ்வாடி கட்சியானது, தேசிய கட்சியான காங்கிரசுடன் கைகோர்த்து இம்முறை தேர்தலை சந்திக்கவுள்ளது. மொத்தமுள்ள 403 தொகுதிகளில் சமாஜ்வாடி 298 தொகுதிகளிலும், காங்கிரஸ் கட்சி 105 தொகுதிகளிலும் போட்டியிடுவதற்கான தொகுதி உடன்பாடு முடிவாகியுள்ளது.
உத்தரப்பிரதேச மாநிலத்தில் முதல் கட்டமாக தேர்தல் நடைபெறும் இடங்களில் ராகுல் காந்தி மற்றும் அகிலேஷ் யாதவ் இருவரும் பிரச்சாரத்தை தொடங்குகின்றனர் என சமாஜ்வாடி கட்சி ஏற்கனவே தெரிவித்தது. அதையடுத்து, லக்னோவில் காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி மற்றும் சமாஜ்வாடி கட்சியின் தேசிய தலைவரும் உத்தரப்பிரதேச முதலமைச்சருமான அகிலேஷ் யாதவ் ஆகியோர் நேற்று ஒன்றாக பிரச்சாரம் செய்தனர். பிரச்சாரம் முடிந்த பின்னர் இருவரும் சேர்ந்து செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது,
ராகுல் காந்தி பேசுகையில், இந்த கூட்டணியானது பிரதமர் மோடியின் அரசியலுக்கு எதிரானது. இந்த கூட்டணியானது கங்கா - யமுனா சங்கமிப்பது போன்றது, இதனால் வளர்ச்சி என்ற சரஸ்வதியானது வெளிவரும். இந்த கூட்டணியானது முன்னேற்றம், வளர்ச்சி மற்றும் அமைதியை பற்றியது. அகிலேஷ் யாதவுக்கும், எனக்கும் தனிப்பட்ட மற்றும் அரசியல் உறவு உள்ளது. அகிலேஷ் ஒரு நல்ல பையன் என்று ஏற்கனவே கூறிஉள்ளேன். ஆனால் அவர் பணியாற்ற அனுமதிக்கப்படவில்லை. பாரதிய ஜனதா - ஆர்எஸ்எஸ் ஆக்கிரமிப்பு, அவர்களுடைய பொய்யான வாக்குறுதிகளை தடுக்க வேண்டும். உத்தரபிரதேச மாநில இளைஞர்களுக்கு புதிய பாதை, புதிய அரசியலை கொடுக்கவேண்டும். மாயாவதி ஜிக்கு நான் தனிப்பட்ட முறையில் மதிப்பளிக்கின்றேன். பகுஜன் சமாஜ் கட்சி உ.பி.யில் ஆட்சி அமைத்தபோது, சில தவறுகளை செய்தது. ஆனால், அவர் மீதான மரியாதை இப்போதும் அப்படியே உள்ளது.
பாஜக ஒரு இந்தியனை மற்றொருவருடன் சண்டையிட செய்துள்ளது. பா. ஜனதாவின் சித்தாந்தமானது நமது நாட்டிற்கு மிகவும் ஆபத்தானது. மாயாவதியின் சித்தாந்தமானது நமக்கு எந்த ஒரு ஆபத்தும் கிடையாது. சமாஜ்வாடி - காங்கிரஸ் கூட்டணியானது சந்தர்ப்பவாத கூட்டணி கிடையாது. நாங்கள், உத்தரபிரதேசம் மற்றும் அதன் மக்கள் அனைவரும் ஒன்றுதான் என்று அவர்களிடம் விளக்குவோம். ஆனால், அவர்கள் உ.பி. மக்களை பிரிப்பதை நாங்கள் அனுமதிக்க மாட்டோம் என்றார்.
அகிலேஷ் யாதவ் பேசுகையில், இது மக்களின் கூட்டணி. இதில் எந்தஒரு சந்தேகமும் கிடையாது. நாங்கள் மாநிலத்தில் அனைத்து இடங்களிலும் வெற்றி பெறுவோம். இப்போதையவிட வளர்ச்சி பணிகள் வேகமாக இருக்கும். சைக்கிள் மற்றும் கை என்பது ஒரு நேர்த்தியான கலவையாகும். நானும், ராகுல் காந்தியும் ஒரு சைக்கிளின் இரு சக்கரங்களை போன்றவர்கள். பாராளுமன்ற தேர்தலில் நாங்கள் இருவரும் ஒற்றுமையாக நின்றோம், இருவரையும் புரிந்து கொண்டோம். இப்போது நாங்கள் இருவரும் ஒன்றாக பணியாற்றுவது மகிழ்ச்சி அளிக்கிறது. மோடி அரசின் ரூபாய் நோட்டு ஒழிப்பு நடவடிக்கையினால் மக்கள் திருப்தி அடையவில்லை என்று கூறினார்.
அகிலேசும் நானும்: ராகுல் அகிலேசும் நானும்: ராகுல் Reviewed by நமதூர் செய்திகள் on 23:47:00 Rating: 5

No comments:

Powered by Blogger.