காந்தி: அடுத்ததடுத்து சர்ச்சை கருத்து!


இந்தியாவின் உண்மையான தேசிய தந்தை மாமன்னர் அக்பர் தான் என்றும் மகாத்மா காந்தி ஆங்கிலேயர்களின் கைக்கூலி என்று முன்னாள் உச்ச நீதிமன்ற நீதிபதி திரு மார்க்கண்டேய கட்ஜு தெரிவித்துள்ளார்.
தனது பேஸ்புக் பக்கத்தில் இதுகுறித்து பதிவிட்டுள்ள கட்ஜு, “நிலப்பிரபுத்துவ, நயவஞ்சகப் மற்றும் பிற்போக்கு எண்ணம் கொண்டவர் தான் காந்தி. இவர் ஆங்கிலேயர்களின் கைக்கூலி இவர் இந்தியாவிற்கு கடுமையான விளைவுகளை ஏற்படுத்தியுள்ளார். இந்திய சுதந்திரத்திற்கு காந்தி தான் காரணம் என்று கூறுவது முற்றிலும் தவறான வாதம். ஆங்கிலேயர்களின் கைக்கூலியாக இருந்த காந்திக்கு இங்கிலாந்த் பாராளமன்றத்திற்கு வெளியே சிலை அமைத்துள்ளதில் எந்த அதிசயமும் இல்லை. அவர்கள் ஏன் நமது சுதந்திரத்திற்காக போராடிய பகத் சிங், சூர்யா சென், சந்திரசேகர் ஆசாத், பிஸ்மில், அஷ்பாக்குள்ள, ராஜ் குறு, குதிரைக்கு போஸ், போன்றவர்களுக்கு சிலை அமைக்கவில்லை?. காந்தியின் பொருளாதார தத்துவங்களான காதி ஆடை, தன்னிறைவு கிராம சமூகம் போன்ற அனைத்தும் பிற்போக்கு மற்றும் முட்டாள்தனமான தத்துவங்களுக்கும். நமது தேசத்தின் உண்மையான தேச தந்தை மாமன்னர் அக்பர் தான் காந்தி அல்ல.
இவ்வாறு தனது முகபுத்தக பக்கத்தில் தெரிவித்துள்ளார். மேலும், காந்தி மற்றும் அக்பர் மீதான தனது கருத்துக்களை தெரிந்துகொள்ள தனது வலைப்பக்கத்தில் சென்று படிக்குமாறு கட்ஜு கேட்டுக்கொண்டுள்ளார். கட்ஜுவின் வலைப்பக்கம் http://justicekatju.blogspot.in/.
இதேபோல, ரூபாய் நோட்டுகளில் இருந்து காந்தி படத்தை‌ நீக்க வேண்டும் என்று ஹரியானா அமைச்சர் அனில் விஜ் தெரிவித்த கருத்தால் சர்ச்சை கிளம்பியது. முன்னதாக, காதி துறை சார்பில் வெ‌ளியிட்டப்பட்ட காலண்டரில் காந்தி நூற்கும் படத்திற்கு பதிலாக மோடி நூ‌ற்கும் படம் இடம் பெற்றிருந்தது. இதுகுறித்து கருத்து தெரிவித்த அமைச்சர் அனில் விஜ், காதி காலண்டரை தொடர்ந்து ரூபாய் நோட்டுகளில் இருந்தும் காந்தியின் படம் அகற்றப்படும் என தெரிவித்திருந்தார். ‌பாரதிய ஜனதா கட்சியை சேர்ந்த அமைச்சரின் பேச்சுக்கு பாஜக கட்சியிலிருந்தே எதிர்ப்பு கிளம்பியதை அடுத்து அமைச்சர் தனது கருத்தை திரும்ப பெற்றார்.
காந்தி: அடுத்ததடுத்து சர்ச்சை கருத்து! காந்தி: அடுத்ததடுத்து சர்ச்சை கருத்து! Reviewed by நமதூர் செய்திகள் on 20:48:00 Rating: 5

No comments:

Powered by Blogger.