காந்தியைக் கொன்ற சித்தாந்தம்!

தேசப்பிதாவின் நினைவு நாள் குறித்த மகாராஷ்டிர அரசின் சுற்றறிக்கையில், காந்தியின் பெயர் ஏன் இல்லை என்று, காந்தியின் கொள்ளுப்பேரன் துஷார் காந்தி மகாராஷ்டிர அரசை தாக்கிப் பேசியிருக்கிறார்

இதுகுறித்து தன் எதிர்ப்பை ட்விட்டரில் பதிவுசெய்த துஷார், ‘பாபுவை (காந்தியை) கொன்ற சித்தாந்தம் எதற்காக அதை நினைவுகூறும்?’ என ட்வீட் வெளியிட்டிருக்கிறார்.
‘நாளை இரண்டு நிமிட மௌன அஞ்சலி செலுத்த வேண்டும் என்றிருந்த மகாராஷ்டிர அரசின் சுற்றறிக்கையில் காந்தியின் பெயர் இல்லை. விடுதலை இயக்கத்தின் தியாகிகளுக்கு அஞ்சலி செலுத்த விரும்புகிறார்களாம்’ எனவும் ட்வீட் வெளியிட்டிருக்கிறார்.
‘ஓ, காந்தியைக் கொன்ற சித்தாந்தம் எப்படி அந்தக் கொலையை நினைவுகூறும்?’ என்று அவர் ட்வீட் வெளியிட்டிருக்கிறார். எந்தக் கட்சியின் பெயரையும் குறிப்பிடவில்லை. துஷார் காந்தி, அருண் மணிலால் காந்தியின் மகன், மணிலால் காந்தியின் பேரன் மற்றும் மகாத்மாவின் கொள்ளுப்பேரன். இவர், 2005ஆம் ஆண்டு தண்டி யாத்திரையை நடத்தியவர்.
காந்தியைக் கொன்ற சித்தாந்தம்! காந்தியைக் கொன்ற சித்தாந்தம்! Reviewed by நமதூர் செய்திகள் on 23:42:00 Rating: 5

No comments:

Powered by Blogger.