உ.பி தேர்தல் : மீண்டும் ஆட்சியைக் கைப்பற்றுவாரா மாயாவதி?


உத்திரபிரதேச தேர்தல் களம் உச்சக்கட்ட பரபரப்பை அடைந்துள்ளது. இந்தியாவிலேயே அதிக சட்டமன்ற தொகுதிகளைக் கொண்ட உத்திரபிரதேச மாநிலத்தில் சமாஜ்வாதி கட்சிக்குள் ஏற்பட்ட பிளவு அனைவரின் கவனத்தையும் மாயாவதியின் பக்கம் திருப்பியுள்ளது. கணிசமான தலித்துக்கள், முஸ்லீம்களையும் தனது வாக்கு வங்கியாகக் கொண்டிருக்கும் மாயவதி கட்சி மொத்தமுள்ள 403 தொகுதிகளிலும் தனித்து களமிறங்குகிறது. மீண்டும் ஆட்சியைப் பிடிக்கும் முயற்சியில் அக்கட்சி தொண்டர்கள் தீவிரமாக செயலாற்றி வருகின்றனர்.
ஏற்கனவே, மூன்று கட்டமாக வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ள பகுஜன்சமாஜ் கட்சி, இன்று மீதமுள்ள 103 தொகுதிகளில், 101 தொகுதிகளுக்கான வேட்பாளர்களின் பெயர்களை அறிவித்துள்ளது.
மொத்தமுள்ள 403 தொகுதிகளில், இதுவரை 401 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை அக்கட்சி அறிவித்துள்ளது. அதில் 87 பேர் தலித், 97 பேர் முஸ்லீம் மற்றும் 106 பேர் பிற்படுத்தப்பட்ட சமூகங்களைச் சார்ந்தவர்கள்.
மீதமுள்ள இரண்டு தொகுதிகள் பொதுப்பிரிவினருக்கானதா? அல்லது, தலித்துகளுக்கான ‘ரிசர்வ்’ தொகுதியாக ஒதுக்கப்படுகிறதா? என்ற தேர்தல் கமிஷனின் அறிவிப்பு வெளியான பின்னர் மேற்கண்ட தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் விரைவில் அறிவிக்கப்படுவார்கள் என அக்கட்சி தெரிவித்துள்ளது.
தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளதால் அனைத்துக் கட்சிகளும் சுறுசுறுப்பு அடைந்துள்ளன. ஆளும் சமாஜ்வாதி கட்சியில் தொடர்ந்து குழப்பம் நீடித்து வரும் நிலையில், முக்கிய எதிர்க்கட்சியான பகுஜன் சமாஜ் கட்சி, மொத்தமுள்ள 403 தொகுதிகளில் இதுவரை 300 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை மூன்றுகட்டங்களாக அறிவித்துள்ளது.
தேசிய கட்சிகளான பாஜக, காங்கிரஸ் ஆகியவையும் விரைவில் வேட்பாளர் பட்டியலை வெளியிட உள்ளது. இந்நிலையில், உத்தரப்பிரதேசம் சட்டசபை தேர்தலில் போட்டியிடுவதற்கான திட்டத்தில் இருந்த ஆம் ஆத்மி கட்சி தற்போது போட்டியில் இருந்து விலகியுள்ளது.
பஞ்சாப் மற்றும் கோவா மாநில சட்டசபை தேர்தல்களில் மட்டும் அக்கட்சி போட்டியிடுகிறது. உத்தரப்பிரதேசம் மாநில தேர்தலில் பாஜக-வை எதிர்த்து தீவிர பிரச்சாரம் மேற்கொள்ளப்படும் என ஆம் ஆத்மி கட்சியின் செய்தி தொடர்பாளர் வைபவ் மகேஸ்வரி தெரிவித்துள்ளார்.
மத்திய அரசு சமீபத்தில் மேற்கொண்ட பணமதிப்பிழப்பு நடவடிக்கை மற்றும் பாஜக வின் மதவாத அரசியல் ஆகியவற்றை மையப்படுத்தி, பாஜக-வுக்கு வாக்களிக்க வேண்டாம் என ஆம் ஆத்மி கட்சியினர் தீவிர பிரசாரம் மேற்கொள்வார்கள் எனவும் அக்கட்சி தெரிவித்துள்ளது.
உ.பி தேர்தல் : மீண்டும் ஆட்சியைக் கைப்பற்றுவாரா மாயாவதி? உ.பி தேர்தல் : மீண்டும் ஆட்சியைக் கைப்பற்றுவாரா மாயாவதி? Reviewed by நமதூர் செய்திகள் on 22:27:00 Rating: 5

No comments:

Powered by Blogger.