எல்லை தாண்டி மீன் பிடித்தால் ரூ.17.5 கோடி அபராதம்!

எல்லை தாண்டி மீன் பிடித்தால் ரூ.17.5 கோடி அபராதம்!

எல்லை தாண்டி மீன் பிடித்தால் அதிக அளவு அபராதம் விதிக்கும் மசோதா இலங்கை நாடாளுமன்றத்தில் இன்று தாக்கல் செய்யப்பட்டது.
நாகப்பட்டினம், புதுக்கோட்டை, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த மீனவர்கள் எல்லை தாண்டி வருவதாகக் கூறி இலங்கைக் கடற்படை தமிழக மீனவர்களைக் கைது செய்வதும், விரட்டியடிப்பதும் தொடர்கதையாகிவருகின்றன. கடந்த ஆண்டு எல்லை தாண்டி மீன் பிடித்த குற்றச்சாட்டில் 113 பேர் இலங்கைச் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், இலங்கை கடல் எல்லையில் அனுமதியின்றி நுழையும் மீனவர்களுக்குப் பல மடங்கு அபராதம் விதிக்கும் வகையில் சர்வதேச மீன்பிடிப் படகுகளுக்கான திருத்த மசோதா இலங்கை நாடாளுமன்றத்தில் இன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இந்த மசோதாவை இலங்கையின் கடல் தொழில் துறை அமைச்சர் மகேந்திர சமரவீர தாக்கல் செய்தார். தற்போது ரூ.15 லட்சம் மட்டுமே எல்லை தாண்டி வருவோருக்கு அபராதமாக விதிக்கப்படுகிறது. ஆனால் இன்று தாக்கல் செய்த மசோதாவில் ரூ.17.5 கோடி வரை அபராதத் தொகை அதிகரிக்கப்பட்டுள்ளது. மேலும் அபராதம் விதிக்கப்படும் படகையும், படகின் உரிமையாளரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் தமிழக மீனவர்களுக்கு பெரிதும் பாதிப்பு ஏற்படும் என்று கூறப்படுகிறது.
எல்லை தாண்டி மீன் பிடித்தால் ரூ.17.5 கோடி அபராதம்! எல்லை தாண்டி மீன் பிடித்தால் ரூ.17.5 கோடி அபராதம்! Reviewed by நமதூர் செய்திகள் on 23:33:00 Rating: 5

No comments:

Powered by Blogger.