சாத்தியமில்லா வேலைவாய்ப்பு உருவாக்கம்!

சாத்தியமில்லா வேலைவாய்ப்பு உருவாக்கம்!

மார்ச் மாதத்துக்குள் 75 லட்சம் வேலைவாய்ப்புகளை உருவாக்குவதாக மோடி அரசு கூறுவது மூர்க்கத்தனமாக இருப்பதாக முன்னாள் நிதியமைச்சரான ப.சிதம்பரம் கருத்துத் தெரிவித்துள்ளார்.
’ஸ்பீக்கிங் ட்ரூத் டூ பவர்’ என்ற தனது புத்தகத்தை வெளியிடுவது தொடர்பான ஆலோசனைக் கூட்டம் ஒன்றில் ஜனவரி 30ஆம் தேதி டெல்லியில் பங்கேற்றுப் பேசிய முன்னாள் நிதியமைச்சரும் காங்கிரஸ் கட்சித் தலைவருமான ப.சிதம்பரம், வேலைவாய்ப்பு உருவாக்கம் குறித்த மத்திய அரசின் போக்கைக் கடுமையாகச் சாடியுள்ளார். அவர், “மார்ச் மாதத்துக்குள் இந்தியாவின் முறைசார் துறையில் 75 லட்சம் வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படுமானால், இந்தியாவின் முறைசாரா மற்றும் வேளாண் துறைகளிலும் 75 லட்சம் வேலைவாய்ப்புகளை உருவாக்க முடியும். அதன்படிப் பார்த்தால், 150 லட்சம் வேலைவாய்ப்புகளை உருவாக்கித் தருவதற்கு இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியானது தற்போதுள்ள அளவைவிட ஐந்து மடங்கு அதிகமாக இருக்க வேண்டும். இதற்கு வாய்ப்பே இல்லை” என்று பேசியுள்ளார்.
அவரது வாதப்படி, 2014-15 நிதியாண்டில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 7.5 சதவிகிதமாக இருந்தபோது தொழிலாளர் வருங்கால வைப்பு நிதிகளின் எண்ணிக்கை 23 லட்சமாகவும், 2015-16 நிதியாண்டில் பொருளாதார வளர்ச்சி 8 சதவிகிதமாக இருந்தபோது 25 லட்சமாகவும் இருந்தது. எனில், எவ்வாறு 2016-17 நிதியாண்டில் இந்த எண்ணிக்கை 75 லட்சமாக உயரும் என்று கேள்வியெழுப்பியுள்ளார். இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியைவிட ஐந்து மடங்கு பெரிய அளவைக்கொண்டுள்ள சீனா கூட 150 லட்சம் வேலைவாய்ப்புகளையே உருவாக்குகிறது என்பதையும் சிதம்பரம் சுட்டிக்காட்டியுள்ளார்.
சாத்தியமில்லா வேலைவாய்ப்பு உருவாக்கம்! சாத்தியமில்லா வேலைவாய்ப்பு உருவாக்கம்! Reviewed by நமதூர் செய்திகள் on 23:24:00 Rating: 5

No comments:

Powered by Blogger.