பாலின இடைவெளி: இந்தியா பின்னடைவு!
பாலின இடைவெளிக் குறியீட்டு வளர்ச்சியில் இந்தியா பின்னடைவைச் சந்தித்துள்ளது.
பாலின இடைவெளிக் குறியீடு குறித்து உலக அளவிலான ஆய்வை உலகப் பொருளாதார மன்றம் நடத்தியது. இந்த ஆய்வு முடிவுகளில் இந்தியா 21 இடங்கள் பின்னடைவைச் சந்தித்துள்ளது. இந்தியாவின் பாலின இடைவெளிக் குறியீடு 108ஆக உள்ளது. தரவரிசைப் பட்டியலில் அண்டை நாடுகளான சீனா, வங்கதேசம் ஆகிய நாடுகளை விட இந்தியா பின்தங்கிய நிலையில் உள்ளது. பொருளாதாரம், குறைந்த ஊதியப் பணிகளில் பெண்களின் பங்களிப்பு குறைந்ததே இச்சரிவுக்குக் காரணம் என்று கூறப்படுகிறது.
தற்போதைய வளர்ச்சி விகிதத்தைக் கணக்கில் கொண்டால், உலகளாவிய பாலின இடைவெளி சீராவதற்கு இன்னும் 100 ஆண்டுகள் ஆகும் என்று உலகப் பொருளாதார மன்றத்தின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. பணியிடங்களில் இந்த நிலவரம் இன்னும் மோசமாகவே உள்ளது. பணியிடங்களில் நிலவும் பாலின இடைவெளி சீராவதற்கு இன்னும் 217 ஆண்டுகள் தேவைப்படும் என்று கூறப்பட்டுள்ளது.
பாலின இடைவெளிக் குறியீட்டில் ஐஸ்லாந்து முதலிடத்தைப் பிடித்துள்ளது. அதற்கு அடுத்த இடங்களில் நார்வே (2), பின்லாந்து (3), ருவாண்டா (4), ஸ்வீடன் (5), நிகரகுவா (6), ஸ்லோவேனியா (7), அயர்லாந்து (8), நியூசிலாந்து (9), பிலிப்பைன்ஸ் (10) ஆகிய நாடுகள் உள்ளன.
பாலின இடைவெளி: இந்தியா பின்னடைவு!
Reviewed by நமதூர் செய்திகள்
on
04:09:00
Rating:
No comments: