புதிய குவாரிகள்: ஸ்டாலின் எதிர்ப்பு!
தமிழகத்தில் புதிதாக 70 மணல் குவாரிகள் திறக்க அரசு முடிவு செய்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ள நிலையில், இதற்கு திமுக செயல்தலைவர் ஸ்டாலின் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
மணல் விற்பனையை முறைப்படுத்துவது தொடர்பாக நேற்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் 8 மாவட்டங்களில் 70 புதிய மணல் குவாரிகள் திறக்க முடிவு செய்யப்பட்டதாக தகவல் வெளியாகியது. இதனால் தமிழகம் பாலைவனமாக மாறிவிடும் என்று இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் முத்தரசன் கண்டனம் தெரிவித்திருந்தார்.
இந்த சூழ்நிலையில் புதிய மணல் குவாரிகளை திறக்க எதிர்ப்பு தெரிவித்து திமுக செயல்தலைவர் ஸ்டாலின், இன்று ( நவம்பர் 22) வெளியிட்டுள்ள அறிக்கையில்,"புதிதாக 70மணல் குவாரிகளை திறக்கவுள்ள அரசின் முடிவு அதிர்ச்சியளிக்கிறது. புதிய மணல் குவாரிகளால் தமிழகம் பாலைவனமாக மாறி விவசாய நீர் ஆதாரங்கள் சீர்குலையும் என்று தெரிவித்துள்ள அவர், வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்படும் மணல் விற்பனையை அனுமதிக்க அரசு மறுப்பது ஏன், எம்-சாண்ட் தயாரிக்க விண்ணப்பித்த நிறுவனங்களுக்கு அனுமதி வழங்குவதில் அரசு தாமதம் செய்தது ஏன்? போன்ற கேள்விகளையும் எழுப்பியுள்ளார்.
மேலும் மணல் குவாரிகள் அமைக்கும் முடிவை அரசு கைவிடாவிட்டால் மக்கள் மற்றும் விவசாயிகளைத் திரட்டிப் போராட்டம் நடத்தப்படும். குவாரிகள் அமைக்கப்பட்டால் மணல் மாபியாக்கள் ஆதிக்கம் அதிகரிக்கும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
புதிய குவாரிகள்: ஸ்டாலின் எதிர்ப்பு!
Reviewed by நமதூர் செய்திகள்
on
03:32:00
Rating:
No comments: