எண்ணெய் விநியோகம்: முன்னேறிய ஈரான்!
இந்தியாவுக்கு அதிகளவில் கச்சா எண்ணெய் விநியோகம் செய்யும் நாடுகளில் சவுதி அரேபியாவைப் பின்னுக்குத் தள்ளி ஈரான் இரண்டாவது இடத்துக்கு முன்னேறியுள்ளது.
ஜூலை 23ஆம் தேதி மக்களவையில் இதுகுறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சரான தர்மேந்திர பிரதான் எழுத்துப்பூர்வமாக அளித்துள்ள பதிலில், “சென்ற ஏப்ரல் - ஜூன் காலாண்டில் இந்தியாவுக்கு அதிகளவு கச்சா எண்ணெய் விநியோகம் செய்யும் நாடுகளில் ஈரான் இரண்டாவது இடத்துக்கு முன்னேறியுள்ளது. ஈரானின் டெஹ்ரான் நகரிலிருந்து எண்ணெய் விநியோகத்துக்கு பல்வேறு சிறப்புச் சலுகைகளும், கடன் அவகாசமும் வழங்கப்பட்டது” என்று கூறியுள்ளார். மேற்கூறிய மூன்று மாதங்களில் தினசரி 4,57,000 பேரல்கள் வீதம் மொத்தம் 5.67 மில்லியன் டன் அளவிலான கச்சா எண்ணெய்யை இந்தியா ஈரானிடமிருந்து இறக்குமதி செய்துள்ளது.
சீனாவைத் தொடர்ந்து அதிகளவு கச்சா எண்ணெய்யை இறக்குமதி செய்து ஈரானின் இரண்டாவது மிகப்பெரிய இறக்குமதியாளராக இந்தியா உள்ளது. சவுதி அரேபியா மொத்தம் 5.22 மில்லியன் டன் அளவிலான கச்சா எண்ணெய்யை மட்டுமே இந்தியாவுக்கு ஏற்றுமதி செய்து மூன்றாவது இடத்தில் உள்ளது. மொத்தம் 7.27 மில்லியன் டன் கச்சா எண்ணெய்யை இந்தியாவுக்கு ஏற்றுமதி செய்துள்ள ஈராக் முதலிடம் வகிக்கிறது. அமெரிக்கா சென்ற ஜூன் மாதத்தில் இந்தியா உள்ளிட்ட நாடுகள் ஈரானிடமிருந்து தங்களது எண்ணெய் இறக்குமதியைக் குறைத்துக்கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தியிருந்தது. ஆனால் ஈரானுடனான தங்களது வர்த்தகத்தை தங்களது நாட்டின் விருப்பத்தின் பேரிலேயே மேற்கொள்வோம் என்று இந்தியா தரப்பில் பதிலளிக்கப்பட்டது.
எண்ணெய் விநியோகம்: முன்னேறிய ஈரான்!
Reviewed by நமதூர் செய்திகள்
on
06:06:00
Rating:
No comments: