தூத்துக்குடியில் கட்டாயப்படுத்தப்பட்ட அமைதி?
தூத்துக்குடியில் அமைதி நிலைநாட்டப்பட்டதாக போலீசாரும் மாவட்ட நிர்வாகமும் நீதிமன்றத்தில் தவறான தகவல் அளித்துவருவதாக மனித உரிமை அமைப்பு குற்றம் சாட்டியுள்ளது.
இது தொடர்பாக மக்கள் கண்காணிப்பகம் என்ற மனித உரிமை அமைப்பு தூத்துக்குடியில் நடந்த துப்பாக்கிச் சூடு, அதன் பின் நடந்த போலீசாரின் அத்துமீறல்கள் ஆகியவற்றை பாதிக்கப்பட்ட மக்களுக்கு சமர்ப்பிக்கும் அறிக்கை என்ற பெயரில் அறிக்கை ஒன்றை தயாரித்து வெளியிடப்பட்டுள்ளது. அறிக்கையை வெளியிட்டு அந்த அமைப்பின் செயல் இயக்குனா் ஹென்றி டிபேன் நேற்று(23.07.18) தி இந்து நாளிதழுக்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளதாவது:
மே 22ஆம் தேதி நடந்த துப்பாக்கிச்சூட்டிற்கு பின்னர் ஜனநாயக உரிமைகள் நசுக்கப்பட்ட சூழலில், பொய் வழக்குகள் போடப்பட்ட ஒரு கட்டாயப்படுத்தப்பட்டநிலையில்தான், அந்த மாவட்டத்தில் அமைதி நிலைநாட்டப்பட்டுள்ளது. ஆனால் இதை மறைத்து அந்த மாவட்டத்தில் அமைதியை நிலை நாட்டி விட்டதாக மாவட்ட நிர்வாகமும் போலீசாரும் நீதிமன்றங்களில் தவறான தகவல்களைக் கூறி வருகின்றனர். இதுவரை 243 பொய் வழக்குகள் போராடிய மக்கள் மீது மட்டுமே போடப்பட்டுள்ளன. ஒரு வழக்குகூட போலீசார் அல்லது நிர்வாகத்தினர் மீது போடப்படவில்லை. பாதிக்கப்பட்டவர்கள் புகார்கள் அளித்தால் போலீஸ் அவர்களை விசாரணைக்கு அழைத்துச் செல்கிறது. அவர்களின் புகார்களின் அடிப்படையில் முதல் தகவல் அறிக்கை தயாரிப்பதில்லை.
சிபிசிஐடிக்கு வழக்குகள் மாற்றப்பட்டதாக கூறுவது பொய்யான தகவலாகும். துப்பாக்கிச்சூடு தொடர்புடைய 5 வழக்குகள் மட்டுமே சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டுள்ளன. மற்ற 238 வழக்குகள் மாவட்ட போலீசாரால் விசாரிக்கப்பட்டு வருகின்றன. இந்த வழக்குகள் மக்களைத் துன்புறுத்தவே பயன்படுத்தப்படுகின்றன.
இந்த அறிக்கையை வெளியிடுவதற்காக நிகழ்ச்சி ஒன்றை திட்டமிட்டிருந்தோம். ஆனால் அந்த நிகழ்ச்சிக்கு அனுமதி மறுத்ததோடு நிகழ்ச்சியில் உரையாற்ற இருந்தவர்களையும் போலீசார் மிரட்டியுள்ளனர். நிகழ்ச்சியை நடத்துவதற்கான ஏற்பாடுகளில் ஈடுபட்ட மக்கள் கண்காணிப்பக ஊழியர்களையும் மிரட்டியுள்ளனர்.
இவ்வாறு அவர் கூறியுள்ளா
தூத்துக்குடியில் கட்டாயப்படுத்தப்பட்ட அமைதி?
Reviewed by நமதூர் செய்திகள்
on
06:04:00
Rating:
No comments: