இந்தியத் தேர்தலில் ரஷ்யா தலையிட வாய்ப்பு?
இந்தியா, பிரேசில் ஆகிய நாடுகளின் தேர்தல்களில் ரஷ்யா தலையிட வாய்ப்புள்ளதாக ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழக நிபுணர் தெரிவித்துள்ளார்.
அமெரிக்க அதிபருக்கான தேர்தல் கடந்த 2016ஆம் ஆண்டு நடைபெற்றது. இந்த தேர்தலில் ட்ரம்ப்புக்கு ஆதரவாகவும் ஹிலாரி கிளிண்டனுக்கு எதிராகவும் ரஷ்யா செயல்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அமெரிக்காவின் முன்னணி உளவு அமைப்புகளும் இந்த கருத்தை உறுதி செய்தன .தற்போது இந்த சம்பவம் தொடர்பாக விசாரணையும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இந்நிலையில் இந்தியா மற்றும் பிரேசில் நாட்டுத் தேர்தல்களில் ரஷ்யா தலையிட வாய்ப்புள்ளதாக ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழக நிபுணர் தெரிவித்துள்ளார்.
சமூக வலைதளங்களில் வெளிநாடுகளின் தலையீடு தொடர்பாக அமெரிக்க நாடாளுமன்ற புலனாய்வுக் குழு விசாரணை நடத்தி வருகிறது. விசாரணையில் பங்கேற்ற ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் பிலிப் ஹோவர்ட், “உலகிலேயே தொழில்நேர்த்தி கொண்ட ஊடகங்கள் அமெரிக்காவில்தான் உள்ளன. தங்களுக்குக் கிடைக்கும் ஆதாரங்களை மதிப்பீடு செய்யாமல் அவை பயன்படுத்துவதில்லை. நம்முடன் நேச உறவில் உள்ள ஜனநாயக நாடுகளின் ஊடகங்கள் தொடர்பாக கவலை ஏற்படுகிறது.
ரஷ்யாவின் பார்வை அமெரிக்காவிடமிருந்து இந்தியா, பிரேசில் ஆகிய நாடுகளின் பக்கம் திரும்பியுள்ளதாக எண்ணுகிறேன். இந்த இரு நாடுகளில் வரவிருக்கும் தேர்தல்களில் ஊடகங்கள் வாயிலாக ரஷ்யா தலையிடக்கூடும்” என்று அவர் கூறியுள்ளார்.
இந்தியத் தேர்தலில் ரஷ்யா தலையிட வாய்ப்பு?
Reviewed by நமதூர் செய்திகள்
on
05:04:00
Rating:
No comments: