திருச்சியில் அரசமைப்பு சட்ட பாதுகாப்பு மாநாடு!
மமக சார்பில் திருச்சியில் அக்டோபர் 7இல் அரசமைப்புச் சட்டப் பாதுகாப்பு மாநாடு நடத்துவது என அக்கட்சியின் தலைமை செயற்குழுக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.
மனிதநேய மக்கள் கட்சியின் தலைமை செயற்குழுக் கூட்டம் திருச்சியில் நேற்று (ஆகஸ்ட் 28) அக்கட்சியின் தலைவர் எம்.எச்.ஜவாஹிருல்லா தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில், மறைந்த தமிழகத்தின் முன்னாள் முதல்வரும் திமுக தலைவருமான கலைஞருக்கு நிறைவேற்றப்பட்ட இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதனைத் தொடர்ந்து மமகவின் மாநில செயலாளர் நாவலூர் மீரான் முகைதீன், மற்றும் பத்திரிகையாளர் குல்தீப் நய்யாருக்கும் இரங்கல் தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது.
தொடர்ந்து மமக சார்பில் திருச்சியில் அக்டோபர் 7இல் அரசமைப்புச் சட்டப் பாதுகாப்பு மாநாடு நடத்துவதற்கு நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தில், “விடுதலைப் பெற்று தந்த தியாகிகளால் உருவாக்கப்பட்ட நமது நாட்டின் அரசமைப்புச் சட்டம் நமது நாட்டின் பன்மை பண்பாடுகளை அங்கீகரித்து உருவாக்கப்பட்டது.ஆனால் தற்போது, ஒரே நாடு ஒரே மக்கள் ஒரே மொழி ஒரே சட்டம் என்ற பெயரால் நாட்டின் பன்மை பண்பாடுகளைச் சீர்குலைக்கும் நாசகார பணிகள் அதிவேகமாக நடந்தேறி ஆபத்தான நிலையை உருவாகியுள்ளது. அரசியல் சாசன சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள இந்திய ஒரு மதச்சார்பற்ற சமதர்ம ஜனநாயக குடியரசு என்பதை அழித்து புரட்சியாளர் அம்பேத்கர் தலைமையில் உருவாக்கப்பட்ட நமது அரசமைப்புச் சட்டத்தையே ஒழித்துக் கட்ட நடக்கும் சதியை முறியடித்து மக்களை விழித்துக்கொள்ள செய்திட மதச்சார்பற்ற ஜனநாயக சக்திகளை ஓர் அணியில் திரட்டிட திருச்சியில் அக்டேபார் 7இல் மனிதநேய மக்கள் கட்சி அரசமைப்புச் சட்டப் பாதுகாப்பு மாநாட்டை நடத்த உள்ளது” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், திருமுருகன் காந்தி கைதுக்குக் கண்டனம், நீர் மேலாண்மையில் அலட்சியப் போக்குக்குக் கண்டனம், கேரள மக்களை வஞ்சிக்கும் மத்திய அரசுக்குக் கண்டனம் தெரிவிப்பது உள்ளிட்ட தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டன.
திருச்சியில் அரசமைப்பு சட்ட பாதுகாப்பு மாநாடு!
Reviewed by நமதூர் செய்திகள்
on
05:14:00
Rating:
No comments: