காஷ்மீரில் துப்பாக்கிச் சூடு: பொதுமக்கள் பலி!

காஷ்மீரில் துப்பாக்கிச் சூடு: பொதுமக்கள் பலி!

ஜம்மு காஷ்மீர் புல்வாமா மாவட்டத்தில் பாதுகாப்புப் படையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 3 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர். இந்த சம்பவத்தில் பொதுமக்கள் 7 பேர் பலியாகியுள்ளனர்.
ஜம்மு காஷ்மீர் மாநிலம் புல்வாமா மாவட்டத்திலுள்ள சிர்னூ கிராமத்தில் தீவிரவாதிகள் பதுங்கியிருப்பதாக, உளவுத் துறையினருக்குத் தகவல் கிடைத்தது. இதையடுத்து மாநில காவல் துறையினருடன் இணைந்து பாதுகாப்புப் படையினர் அந்த கிராமத்தைச் சுற்றி வளைத்தனர். இதையடுத்து, இன்று (டிசம்பர் 15) காலையில் அங்கு தீவிரவாதிகள் – பாதுகாப்புப் படையினர் இடையே மோதல் ஏற்பட்டது. இரு தரப்பினரும் துப்பாக்கிச் சூட்டில் இறங்கினர். பல மணி நேரம் நீடித்த சண்டையில் 3 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலில் பாதுகாப்புப் படை வீரர் ஒருவர் கொல்லப்பட்டார். இதன் பின்னர் தற்போது வரை, இரு தரப்பினர் இடையேயான சண்டை தொடர்வதாகக் கூறப்படுகிறது.
இந்த தாக்குதலில் அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் 7 பேர் பலியான தகவல் தற்போது தெரிய வந்துள்ளது. இதற்குக் கண்டனம் தெரிவித்துள்ளார் தேசிய மாநாட்டுக் கட்சியைச் சேர்ந்த உமர் அப்துல்லா. “7 பேர் இறந்துள்ளதற்கு எந்த விளக்கமும் அளிக்கப்படவில்லை. அதிகளவில் படையினரைப் பயன்படுத்துவதற்குக் காரணம் கூறப்படவில்லை. இது ஒரு படுகொலை. இப்படித்தான் இதனை விளக்க முடியும்” என்று அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
7 பேர் மரணமடைந்தது குறித்துத் தகவல் கிடைத்திருப்பதாகவும், அது பற்றி விசாரித்து வருவதாகவும் கூறியுள்ளார் புல்வாமா துணை ஆணையர் குலாம் முகம்மது தர்.
சிர்னூ பகுதியில் மொபைல் இணையச் சேவை துண்டிக்கப்பட்டுள்ளது.
https://minnambalam.com/k/2018/12/15/71
காஷ்மீரில் துப்பாக்கிச் சூடு: பொதுமக்கள் பலி! காஷ்மீரில் துப்பாக்கிச் சூடு: பொதுமக்கள் பலி! Reviewed by நமதூர் செய்திகள் on 23:02:00 Rating: 5

No comments:

Powered by Blogger.