“என்னை ஏன் துரோகி என்று கூறுகிறீர்கள்” – நஸ்ரூதின் ஷா

“என்னை ஏன் துரோகி என்று கூறுகிறீர்கள்” – நஸ்ரூதின் ஷா
தமிழில்: V.கோபி 
இன்றைய இந்தியாவில் மனித உயிர்களை (காவல்துறை அதிகாரியை) விட பசுக்களுக்கு தான் நாட்டில் அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது என்று தான் கூறியது கருத்து சரியே என்று மீண்டும் கூறியுள்ளார் நஸ்ரூதின் ஷா. இவரது கருத்து சமூக ஊடகத்தில் பெரும் விவாதத்தை எழுப்பியது.
டிசம்பர் மூன்றாம் தேதி உத்தரபிரதேசத்தில் உள்ள புலந்த்சார் மாவட்டத்தில் பசுவின் இறந்த உடல் கண்டுபிடிக்கபட்டதை தொடர்ந்து அங்கு வன்முறை வெடித்தது. இதில் காவல்துறை ஆய்வாளர் சுதோப் குமார் சிங் கொல்லப்பட்டார். இந்த சம்பவத்தை மனதில் வைத்தே நஸ்ரூதின் ஷா கருத்து கூறியுள்ளார்.
பத்திரிக்கையாளரக்ளிடம் பேசிய நஸ்ரூதின் ஷா, “ஒரு அக்கறையுள்ள இந்திய குடிமகனாகவே எனது கருத்தை கூறினேன். இதற்காகவா என்னை துரோகி என்று கூறுகிறீர்கள்? நான் விரும்பும், எனது வீடாக நினைக்கும் நாட்டின் மீது கொண்ட அக்கறையை நான் வெளிப்படுத்துகிறேன். இது எப்படி குற்றமாகும்” என்றார்.
இரு மதக்குழுக்களுக்கு இடையே நல்லிணக்கத்தை வளர்க்க பாடுபடும் குடிமைச் சமூக இயக்கமான கர்வான் – இ – மொகபத் இந்தியா கூட்டத்தில் கலந்து கொண்டு பேட்டி அளித்த போது முதன்முறையாக தனது கருத்தை வெளிப்படுத்தினார் நஸ்ரூதின் ஷா. 
“ஏற்கனவே எங்கும் விஷம் பரவியுள்ளது. சட்டத்தை தங்கள் கையில் எடுத்து கொண்டவர்களுக்கு தண்டனையிலிருந்து முழுமையான விலக்கு அளிக்கப்படுகிறது. காவல்துறை அதிகாரியின் உயிரை விட பசுக்களின் உயிருக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பதை நாம் இந்தியாவின் பல பகுதிகளில் பார்த்து வருகிறோம். தற்போதுள்ள இந்தியவில் தான் எனது குழந்தைகள் வளர வேண்டும் என்று நினைக்கும் போது அச்சமாக உள்ளது. ஆனால் இது பயம் அல்ல, கோபம். சரியாக யோசிக்கும் ஒவ்வொரு மனிதனும் பயத்தை உணராமல் கோப்பபட வேண்டும். இந்தியா தான் எனது வீடு. எங்களை இங்கிருந்து வெளியேற்ற யாருக்கு தைரியமிருக்கிறது?” என்று பேசினார்.
டிசம்பர் மூன்றாம் தேதி, பஜ்ரங் தள் அமைப்பின் தொண்டர்கள் காவல்துறையினரோடு மோதலில் ஈடுபட்டனர். அப்போது சிங்ராவதி கிராமத்தில் உள்ள காவல் நிலையம் தீ வைத்து கொளுத்தப்பட்டது. இது பெரும் கலவரமாக மாறி சுதோப் குமார் சிங் என்ற காவல்துறை ஆய்வாளரும் சுமித் குமார் என்ற மாணவனும் துப்பாக்கி குண்டுக்கு பலியாகினர். கரும்பு வயல்களில் இறந்துதுபோன மூன்று பசு உடல்களை கண்டதாக அருகிலுள்ள மஹாவ் கிராமத்தினர் கூறியதற்கு பிறகே வன்முறை வெடித்தது குறிப்பிடத்தக்கது.
இரண்டு வாரங்களுக்கு முன்பு, காவல்துறை கூடுதல் கண்காணிப்பளர் (கிராமப்புறம்) ரயீஸ் அக்தர் கூறுகையில், “பசுவை கொண்றவர்களை கண்டுபிடிப்பதே எங்களின் முதல் முன்னுரிமை. கொலை மற்றும் கலவரம் குறித்து பின்னர் விசாரிக்கப்படும்” என்று கூறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
முன்னதாக, காவல்துறை ஆய்வாளர் சுதோப் சிங்கின் இறப்பு சாதாரண விபத்தே என உத்தரபிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் கூறியுள்ளார். இந்நிலையில், பசுக்கொலை சமந்தமாக கைது செய்யப்பட்ட நான்கு பேரும் அப்பாவிகள் என கீழ் நீதிமன்றத்தில் டிசம்பர் 19-ம் தேதி உத்தரபிரதேச அரசாங்கம் கூறியுள்ளது. 
நன்றி: scroll.in
“என்னை ஏன் துரோகி என்று கூறுகிறீர்கள்” – நஸ்ரூதின் ஷா “என்னை ஏன் துரோகி என்று கூறுகிறீர்கள்” – நஸ்ரூதின் ஷா Reviewed by நமதூர் செய்திகள் on 04:23:00 Rating: 5

No comments:

Powered by Blogger.