சபரிமலை விவகாரத்தில் அதிருப்தியடைந்த இரண்டு பாஜக தலைவர்கள் சிபிஎம்-க்கு ஆதரவு

சபரிமலை விவகாரத்தில் அதிருப்தியடைந்த இரண்டு பாஜக தலைவர்கள் சிபிஎம்-க்கு ஆதரவு

சபரிமலை ஐய்யப்பன் கோயிலில் பெண்களை அனுமதிப்பது தொடர்பில் அரசியல் ஆதாயத்துக்காக கேரள பாஜக தவறான நிலைப்பாட்டை எடுத்து வருவதால் அதிருப்தியடைந்த அக்கட்சியின் இரண்டு மாநிலக் குழு உறுப்பினர்கள் ஆளும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஆதரவளிக்க தீர்மானித்துள்ளனர்.
கேரள பாஜகவில் மாநில குழு உறுப்பினர்களாக இருந்துவந்த வெள்ளநாடு கிருஷ்ண குமார் மற்றும் உழமலக்கல் ஜெயக்குமார் ஆகியோர் பாஜகவுக்கு எதிரான தமது முடிவினை பகிரங்கமாக அறிவித்திருக்கிறார்கள்.
இந்த விவகாரத்தில், பாலின சமத்துவத்தின் அடிப்படையில் உச்ச நீதிமன்ற தீர்ப்பை முதலில் ஆதரித்த மாநில பாஜக மற்றும் அதன் உப அமைப்புகள் பின்னர் அரசியல் ஆதாயத்துக்காக தேசியக் குழு அளித்த அழுத்தத்தின் காரணமாக தமது நிலைப்பாட்டை மாற்றிக்கொண்டன. வழிபாட்டு முறைகளிலிருக்கும் பிற்போக்கு விழுமியங்களையும், பாகுபாட்டையும் களைந்து முன்நகர்வை ஏற்றுக்கொள்ளும் முடிவினை எடுத்த மாநில பாஜக, பின்னர் அரசியல் தந்திரோபாயங்களுக்காக ஆளும் கட்சிக்கு எதிரான நிலைப்பாட்டை மேற்கொண்டு மக்களை திசைதிருப்புகிறது என இருவரும் ஒருசேர தெரிவித்துள்ளனர்.
அதுமட்டுமின்றி, ஐய்யப்பன் கோயிலுக்கு பெண்களை அனுமதிக்கும் விவகாரத்தில் முற்போக்குத்தனமான செயல்பட விரும்புகிறோம். ஆக்கபூர்வமான திட்டங்களின் மூலம் மதச்சார்பின்மையை நிலைநாட்ட வேண்டியது அவசியம். அந்த தளத்தில் கொள்கைகளை வகுக்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு இனி ஆதரவளிப்போமென பாஜகவிலிருந்து வெளியேறிய தலைவர்கள் தெரிவித்துள்ளனர்.
சபரிமலை விவகாரத்தில் அதிருப்தியடைந்த இரண்டு பாஜக தலைவர்கள் சிபிஎம்-க்கு ஆதரவு சபரிமலை விவகாரத்தில் அதிருப்தியடைந்த இரண்டு பாஜக தலைவர்கள் சிபிஎம்-க்கு ஆதரவு Reviewed by நமதூர் செய்திகள் on 04:21:00 Rating: 5

No comments:

Powered by Blogger.