தமிழக திட்டங்களை பாஜக நிறைவேற்றுவதில்லை!

தமிழக திட்டங்களை பாஜக நிறைவேற்றுவதில்லை!

தமிழ்நாட்டுக்கான திட்டங்களை பாஜக நிறைவேற்றவில்லை என்று திமுக முதன்மைச் செயலாளர் டி.ஆர்.பாலு குற்றம்சாட்டியுள்ளார்.
காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசின் முந்தைய ஆட்சிக் காலத்தில் தமிழ்நாட்டில் தங்க நாற்கரச் சாலைத் திட்டம் மற்றும் பல நெடுஞ்சாலைகள் விரிவாக்கத் திட்டம் செயல்படுத்தப்பட்டது. இந்தத் திட்டங்கள் தமிழ்நாட்டுக்கு வருவதற்கு அப்போதைய ஒன்றிய சாலைப் போக்குவரத்துத் துறை அமைச்சராக இருந்த டி.ஆர்.பாலு முக்கியக் காரணமாக இருந்தார். ஆனால் இப்போதைய பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு தமிழ்நாட்டுக்கான திட்டங்களைச் செயல்படுத்த மறுப்பதாக டி.ஆர்.பாலு குற்றம் சாட்டியுள்ளார்.
இதுகுறித்து அவர் இன்று (டிசம்பர் 27) டைம்ஸ் ஆஃப் இந்தியா ஊடகத்துக்கு அளித்துள்ள பேட்டி ஒன்றில், “மோடி கூறும் வளர்ச்சி என்பது போலியானது. தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்காக திட்டங்களைச் செயல்படுத்தும் எந்தவொரு அரசியல் விருப்பமும் பாரதிய ஜனதா கட்சியின் தலைவர்களிடத்தில் இல்லை. தமிழகத் தேர்தல்களில் அவர்கள் வெற்றிபெறும் வாய்ப்புகள் குறைவாக இருப்பதால், தமிழ்நாட்டுக்கான மேம்பாட்டுத் திட்டங்களை, குறிப்பாக நெடுஞ்சாலைகள் திட்டங்களைச் செயல்படுத்துவது பற்றி அவர்களுக்குக் கவலையில்லை” என்று கூறியுள்ளார்.
நெடுஞ்சாலைகள் கட்டமைப்புப் பணிகளில் மாநில அரசு மேற்கொண்டுள்ள பணிகள் என்ன என்ற கேள்விக்கு டி.ஆர்.பாலு பதிலளிக்கையில், “2004ஆம் ஆண்டுமுதல் 2009ஆம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் தமிழ்நாட்டில் 3,000 கிலோ மீட்டருக்கும் அதிகமாகத் தேசிய நெடுஞ்சாலைக் கட்டமைப்புப் பணிகள் நடந்தன. ஆனால் இப்போதைய மோடி ஆட்சியில் அதைக் காட்டிலும் 20 விழுக்காடு குறைவான அளவுக்கே சாலைக் கட்டமைப்புப் பணிகள் நடந்துள்ளன. தமிழகம் மற்றும் புதுவையிலிருந்து சென்றிருக்கும் 40 பாராளுமன்ற உறுப்பினர்களில் யாரும் இதுகுறித்துக் கேள்வி எழுப்புவதே இல்லை. அண்மையில் நடந்த 5 மாநிலத் தேர்தல்கள் பாஜக அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என்பதைக் காட்டியிருக்கின்றன. தமிழகத்திலும் அதுவே எதிரொலிக்கும்” என்றார்.
https://minnambalam.com/k/2018/12/27/51
தமிழக திட்டங்களை பாஜக நிறைவேற்றுவதில்லை! தமிழக திட்டங்களை பாஜக நிறைவேற்றுவதில்லை! Reviewed by நமதூர் செய்திகள் on 23:47:00 Rating: 5

No comments:

Powered by Blogger.