FRATERNITY FEST 2019 தொடக்க நிகழ்ச்சி

FRATERNITY FEST 2019 தொடக்க நிகழ்ச்சி - வீடியோ!
ஜித்தா (27 டிச 2018): FRATERNITY FEST 2019 நிகழ்ச்சியின் லோகோ திறப்புவிழா ஜித்தா சரஃபிய்யாவில் சிறப்பாக நடைபெற்றது.
"Celebrate Friendship 2019" என்ற பெயரில் இந்தியா ஃப்ரட்டர்னிட்டி ஃபாரம் சார்பில் சகோதரத்துவ நிகழ்ச்சி ஜனவரி 1 முதல் மார்ச் 31 ஆம் தேதி வரை (மூன்று மாதங்கள்)நடைபெறவுள்ளது.
இந்த தொடர் நிகழ்ச்சியை ஒட்டி தமிழகம் ,கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா மற்றும் இதர மாநில பிரிவுகள் சார்பில் பல்வேறு போட்டிகளுக்கு ஏற்பாடு செய்யப் பட்டுள்ளது.
தமிழ்நாடு சார்பில் கவிதைப் போட்டி, பாட்டுப் போட்டி, விளையாட்டுப் போட்டி, குழந்தைகளுக்கான போட்டிகள் என பல்வேறு போட்டிகளும் ஏற்பாடு செய்யப் பட்டுள்ளன. இதன் தொடக்க நிகழ்ச்சி புதன் இரவு ஷரஃபிய்யாவில் நடைபெற்றது.
"Celebrate Friendship 2019" லோகோவினை Abeer Medical Group தலைவர் ஆலுங்கள் முஹம்மது திறந்து வைத்தார். அதனை தொடர்ந்து நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில், IFF பிராந்திய தலைவர் ஃபயாசுத்தீன் , பிராந்திய செயலர்கள் ஷம்சுத்தீன் கே.எம், முஹம்மத் இக்பால், வடக்கு மாகான செயலர் செய்யது அலி, கேரள மாநில பிரிவு தலைவர் நவ்ஷாத் ஷிராயின்கீகழு , தமிழ் பிரிவு தலைவர் அமீர் சுல்தான் , கர்நாடகா பிரிவு தலைவர் ஹாரிஸ் பந்த்வால் உள்ளிட்டோர் மற்றும் iff செயல் வீரர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
FRATERNITY FEST 2019 தொடக்க நிகழ்ச்சி FRATERNITY FEST 2019 தொடக்க நிகழ்ச்சி Reviewed by நமதூர் செய்திகள் on 00:00:00 Rating: 5

No comments:

Powered by Blogger.