பசுமைத்தீர்ப்பாயத்தின் தீர்ப்பை எதிர்த்து மக்கள் போராட்டம்

பசுமைத்தீர்ப்பாயத்தின் தீர்ப்பை எதிர்த்து மக்கள் போராட்டம்
-ஆனந்தி 
தூத்துக்குடியில்  ஸ்டெர்லைட் ஆலை இயங்குவதற்குப் பசுமை தீர்ப்பாயம் தீர்ப்பு வழங்கியுள்ளதை எதிர்த்து அப்பகுதி மக்கள் மீண்டும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலையால் அப்பகுதியில் வசித்துவருகிற பொதுமக்கள்  நுரையீரல் பிரச்னை, சிறுநீரக பிரச்னை, புற்றுநோய் போன்ற பலவித பாதிப்புகளை சந்தித்து வருகின்றனர். சுற்றுச்சூழலை அழித்துவரும் இந்த ஆலையை மூடவேண்டும் என்பது மக்களின் பிரதான நோக்கமாக இருந்தது. அதற்காக அவர்கள் பல நாட்களாகப் போராடிவந்தனர். மக்களின் கோரிக்கைக்கும், போராட்டத்திற்கும் செவி சாய்க்காத அரசு, பொதுமக்கள் நடத்திய 100வது நாள் போராட்டத்தில் காவல்துறையினரை ஏவி 13 பேரை அரச படுகொலை செய்து, பலரை கை, கால்களை இழக்கவைத்தது. இந்தச் சம்பவத்தின் எதிரொலியாக தூத்துக்குடி மாவட்ட மக்களுக்கு ஆதரவாக தமிழக்தில் பல இடங்களில் போராட்டம் வெடித்தது. போராட்டம் நடத்திய அனைத்து அமைப்புகளையும் காவல்துறை கைது செய்தது. இதனையடுத்து கடந்த மே மாதம் 28ஆம் தேதி ஸ்டெர்லைட் ஆலையை மூடி தமிழக அரசு சீல் வைத்தது.
இதை எதிர்த்து பசுமை தீர்ப்பாயத்தில் வேதாந்தா நிறுவனம் வழக்கு தொடர்ந்தது. அதில் ஆலைத் திறப்பதற்கான பணிகளில் ஈடுபடுமாறு வேதாந்தா நிறுவனத்துக்கு பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவிட்டது. இந்த பசுமைத் தீர்ப்பாயத்தின் இந்த உத்தரவை எதிர்த்தும், இந்த விசாரணை தடை கோரியும் அரசு உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்துள்ளது. ஆனால், இந்த மனுவை நிராகரித்த உச்சநீதிமன்றம்,  ஸ்டெர்லைட் ஆலை விவகாரத்தில் தேசிய பசுமை தீர்ப்பாய உத்தரவுக்குத் தடை வித்திக்க முடியாது எனத் தெரிவித்துள்ளது.  
ஸ்டெர்லைட் ஆலையை மூட வேண்டும் என்பதற்க்காகக் தேசிய பசுமை தீர்ப்பாயத்தில்  தமிழக அரசு மனுதாக்கல்  செய்துள்ளது. இந்த மனு நேற்று முன்தினம்(16-12-2018) விசாரணைக்கு வந்த போது, ஸ்டெர்லைட் ஆலையைத் திறப்பதற்கு தேசிய பசுமை அனுமதி அளித்துள்ளது. இதையடுத்து, ஆலையை மூடுவதற்கான  தமிழக அரசு பிறப்பித்த மனுவை பசுமைத் தீர்ப்பாயம் தள்ளுபடி செய்துள்ளது. இதனால், ஸ்டெர்லைட் எதிர்ப்பாளர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதைதொடர்ந்த்து, பசுமைத் தீர்ப்பாயத்தின் தீர்ப்பை எதிர்த்து தூத்துக்குடியில் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர். தீர்ப்பாயத்தின் தீர்ப்புக்கு எதிர்ப்பு தெரிவித்த மக்கள், பல்வேறு அமைப்பினர், அரசியல்  கட்சியினர் ஆகியோர் ஊர்வலமாக மனு கொடுப்பதற்கு சென்றுள்ளனர். இதனால் அப்பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
ஆனால், அவர்களைக் காவத்துறையினர் தடுத்து நிறுத்து 5 பேர் மட்டுமே சென்று மனு கொடுக்க அனுமதித்துள்ளனர். அப்பகுதியில், பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
பசுமைத்தீர்ப்பாயத்தின் தீர்ப்பை எதிர்த்து மக்கள் போராட்டம் பசுமைத்தீர்ப்பாயத்தின் தீர்ப்பை எதிர்த்து மக்கள் போராட்டம் Reviewed by நமதூர் செய்திகள் on 02:52:00 Rating: 5

No comments:

Powered by Blogger.