ரஃபேல்: ஒப்பந்தம் குறித்தே கேள்வியெழுப்புகிறோம்!

ரஃபேல்: ஒப்பந்தம் குறித்தே கேள்வியெழுப்புகிறோம்!

ரஃபேல் விமானத்தின் தரம் குறித்து காங்கிரஸ் சந்தேகப்படவில்லை என்று குறிப்பிட்டுள்ள ப.சிதம்பரம், “ரஃபேல் ஒப்பந்தம் குறித்துதான் கேள்வி எழுப்புகிறோம்” என்று தெரிவித்துள்ளார்.
ரஃபேல் ஊழல் விவகாரத்தில், சிபிஐ விசாரணை கோரிய வழக்கில் அனைத்து மனுக்களையும் தள்ளுபடி செய்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து ராகுல் காந்தி மன்னிப்பு கேட்க வேண்டும் என்று பாஜகவினர் வலியுறுத்தி வருகின்றனர். ஆனால், “மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் தவறான தகவலை அளித்துள்ளது . அதனடிப்படையிலே தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது” என்று காங்கிரஸ் குற்றம்சாட்டி வருகிறது.மேலும், ரஃபேல் போர் விமான ஊழல் தொடர்பாக நாடாளுமன்ற கூட்டு குழு விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று மக்களவையில் காங்கிரஸ் வலியுறுத்தி வருகிறது.
இந்த நிலையில் பெங்களூருவில் இன்று (டிசம்பர் 21) செய்தியாளர்களை சந்தித்த காங்கிரஸ் மூத்த தலைவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான ப.சிதம்பரம், “நாங்கள் விமானப் படை தளபதிக்கு கேள்வி எழுப்பவில்லை. ராணுவமும், விமானப் படையும் இந்த விவாதத்திலிருந்து விலகியிருங்கள் என்று தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறோம். ரஃபேல் விமானத்தின் தரம் குறித்து நாங்கள் சந்தேகப்படவில்லை. ரஃபேல் ஒப்பந்தத்தில் நடைபெற்றுள்ள முறைகேடு குறித்துதான் கேள்வி எழுப்புகிறோம்” என்று தெரிவித்திருக்கிறார்.
விமானப்படை கேட்டதினால் 126 விமானங்கள் வாங்குவதற்கு நாங்கள் ஒப்பந்தம் செய்தோம். ஆனால் பாஜக அரசு 36 விமானங்களை மட்டுமே வாங்குகிறார்கள். 36 விமானங்களை மட்டும் வாங்குவது ஏன் என விமானப் படைதான் அரசிடம் கேள்வி எழுப்ப வேண்டும் என்று கூறியுள்ள அவர், “ரஃபேல் விவகாரம் மத்திய பிரதேசம், சத்தீஸ்கர், ராஜஸ்தான் தேர்தல்களில் எதிரொலித்துள்ளது. எதிர்வரும் மக்களவைத் தேர்தலிலும் அது எதிரொலிக்கும்” என்றும் கூறியுள்ளார்.
https://minnambalam.com/k/2018/12/21/51
ரஃபேல்: ஒப்பந்தம் குறித்தே கேள்வியெழுப்புகிறோம்! ரஃபேல்: ஒப்பந்தம் குறித்தே கேள்வியெழுப்புகிறோம்! Reviewed by நமதூர் செய்திகள் on 03:12:00 Rating: 5

No comments:

Powered by Blogger.