மார்ச் 20 இராமராஜ்ஜிய இரத யாத்திரை எதிர்ப்பு செங்கோட்டை தடுப்பு மறியல்

நாடுதழுவிய அளவில் ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் காவிபயங்கரவாத நடவடிக்கைகள் பரவலாகி வருகின்றன. தமிழ்நாட்டை தங்களது பிடியில் கொண்டுவரச் செய்யும் முயற்சியாக ஆர்.எஸ்.எஸ் பேரணிகளை நடத்தினார்கள். இச்செயலுக்கு ஒத்துப்போன தமிழ்நாடு அரசு, மோடியின் பொம்மை அரசாகவே இருந்து வருகிறது.
நிவேதிதா நூற்று ஐம்பதாவது ஆண்டு நினைவு இரத யாத்திரை மத்திய அமைச்சர் பொன்.இராதாகிருஷ்ணன் தொடங்கி வைக்க கோவையிலிருந்து சனவரி 22 முதல், பிப்ரவரி 22 சென்னை வரை நடந்து முடிந்துள்ளது. 27 மாவட்டங்களினூடாக 35 கல்லூரிகளுக்குள் நுழைந்து இரண்டு லட்சம் மாணவர்களைச் சந்தித்து, 3000 கி.மீ பயணத்தை முடித்துள்ளது. சேலம் பெரியார் பல்கலைக் கழகம் முன்னே மட்டும் வளர்மதி மற்றும் திராவிடர் விடுதலைக் கழகத் தோழர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இவை கல்வி நிறுவனங்களைக் காவிமயமாக்கும் முயற்சியின் பகுதியாகும்.
விஸ்வ ஹிந்து பரிசத்தின் ஏற்பாட்டில் அயோத்தி முதல் இராமேஸ்வரம் வரை 'இராமராஜ்ய இரத யாத்திரை' என்ற பெயரில் கீழ்வரும் முழக்கங்களை முன்வைத்து பிப்ரவரி 13 அன்று அயோத்தியிலிருந்து உ.பி.முதல்வர் யோகி ஆதித்யநாத்தால் தொடங்கி வைக்கப்பட்டது.
meeting against rada yathra1. இராம இராஜ்யத்தை மறுநிர்மாணம் செய்வது
2. பாடத்திட்டத்தில் இராமாயணத்தை இணைப்பது
3. இராமஜன்ம பூமியில் இராமர் கொவில் கட்டுவது
4. வியாழக்கிழமையை வாரவிடுமுறை நாளாக அறிவிப்பது
5. உலக இந்து நாள் அறிவிப்பது
உத்திரபிரதேசம், மத்தியபிரதேசம், மகாராஷ்ட்ரம், கர்னாடகா, கேரளம் வழியாக தமிழ்னாடு நோக்கி வந்து கொண்டிருக்கிறது. மார்ச் 20 அன்று செங்கோட்டை நுழைந்து, இராஜபாளையம் வழி மதுரை வருகிறது. மதுரை - இராமேஸ்வரம் - திருநெல்வேலி - கன்னியாகுமரி, நாகர்கோவில் என மார்ச் 23 அன்று திருவனந்தபுரம் சென்று முடிகிறது. அடுத்த ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலை நோக்கி நாடு முழுவதும் கலவரச் சூழலை உருவாக்கும் நோக்கில் இந்த இரத யாத்திரை கட்டமைக்கப்படுகிறது. 1990இல் ஆர்.எஸ்.எஸ். மற்றும் அதன் பரிவாரங்களால் முன்னெடுக்கப்பட்ட ” ராம் ரத யாத்திரை” நாடெங்கிலும் பெரும் கலவரங்களிலும், மசூதி இடிப்பிலும் போய் முடிந்ததை நாடே அறியும். தமிழகத்தில் எதிர்ப்பியக்கம் கட்டமைக்க வேண்டிய தேவை நம் முன்னே உள்ள நிலையில் பல்வேறு அமைப்புகளுக்கும் அழைப்பு அனுப்பி தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியால் 06-03-2018 அன்று சென்னை பத்திரிக்கையாளர் மன்றத்தில் ஆலோசணைக் கூட்டம் ஒருங்கிணைக்கப்பட்டது.
------------------------------------------------------------------------------------------------------------------------------------------
06-03-2018 இராமராஜ்ஜிய இரத யாத்திரை எதிர்ப்பு ஆலோசணைக் கூட்டம் - முடிவுகள்
1. சட்டம் ஒழுங்கைச் சீர்குலைக்கும் இராமராஜ்ஜிய இரத யாத்திரை தமிழகத்தில் நுழைய அனுமதிக்காதே என தமிழகக் காவல்துறைத் தலைமை இயக்குனரிடம் மனு அளிப்பது
2. இரதயாத்திரையை தமிழ்நாட்டில் நுழையும் செங்கோட்டை எல்லையிலேயே #தடுப்பு_மறியல்! தலைவர்கள் திரளாகக் கட்சியினருடன் கலந்து கொள்வது.
3. நெல்லை, மதுரை, விருதுநகர், தென்காசி, இராஜபாளையம் ஆகிய இடங்களில் போராட்டத் தயாரிப்புக் கூட்டங்கள் நடத்துவது
4. காவிபயங்கரவாத எதிர்ப்பு மக்கள் கூட்டமைப்பு - தமிழ்நாடு எனும் பெயரில் அனைத்து அமைப்புகளையும் ஒருங்கிணைப்பது. தொடர் செயல்பாடுகளை முன்னெடுப்பது
5. தோழர் மீ.த.பாண்டியன் ஒருங்கிணைப்பாளர் எனத் தீர்மானிக்கப்பட்டது.
6. தொடர் செயல்பாடுகளில் சி.பி.ஐ, சி.பி.ஐ (எம் ), சி.பி.ஐ(எம்-எல்), ம.தி.மு.க, நாம் தமிழர் உள்ளிட்ட அமைப்புகளின் தலைவர்களைச் சந்திப்பது, மார்ச் 20 தடுப்பு மறியலில் பங்கேற்க அழைப்பது
ஒருங்கிணைப்பு - தலைமை
தோழர் மீ.த.பாண்டியன்
தலைவர், தமிழ்த்தேச மக்கள் முன்னணி
பங்கேற்ற தலைவர்கள்:
தோழர் கொளத்தூர் மணி
தலைவர், திராவிடர் விடுதலைக் கழகம்
தோழர் தி.வேல்முருகன் தலைவர்,
தமிழக மக்கள் வாழ்வுரிமைக் கட்சி
தோழர் வன்னியரசு
துணைப் பொதுச்செயலாளர்
விடுதலைச் சிறுத்தைகள் கட்சி
தோழர் தெகலான்பாகவி
தலைவர், எஸ்.டி.பி.ஐ.
தோழர் ஜைனுலாபுதீன்
வழக்கறிஞர் அணிச் செயலாளர்
மனிதநேய மக்கள் கட்சி
தோழர் முகம்மது சேக் அன்சாரி
துணைத்தலைவர்
பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா
தோழர் ஆதிதிராவிடன்
பொதுச்செயலாளர்
தமிழக மக்கள் சனநாயகக் கட்சி
தோழர் பொழிலன்
பொதுச்செயலாளர்
தமிழக மக்கள் முன்னணி
தோழர் தமிழ்நேயன்
தலைவர், தமிழ்தேச மக்கள் கட்சி
தோழர் பாலன்
பொதுச்செயலாளர்
தமிழ்த்தேச மக்கள் முன்னணி
தோழர் தி.கார்ல்மார்க்ஸ்
ஆதித்தமிழர் கட்சி
-------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
கூட்டமைப்பு முடிவின்படி 08-03-2018 அன்று தமிழகக் காவல்துறை தலைமை இயக்குனரைச் சந்திக்க தலைவர்கள் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் தோழர் தி.வேல்முருகன், மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் தோழர் ஜவாஹிருல்லா மற்றும் எஸ்.டி.பி.ஐ தலைவர் தோழர் தெகலான் பாகவி, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைமை நிலையச் செயலாளர் தோழர் தகடூர் தமிழ்ச்செல்வன், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி பொதுச் செயலாளர் தோழர் பாலன், பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா துணைத் தலைவர் தோழர் முகமது ஷேக் அன்சாரி, திராவிடர் விடுதலைக் கழக சென்னை மாவட்டத் தலைவர் தோழர் வேழவேந்தன், இளந்தமிழகம் ஒருங்கிணைப்பாளர் தோழர் செந்தில் உள்ளிட்டோர் சென்றனர்.
தமிழகக் காவல்துறை தலைமை இயக்குனர் திரு இராஜேந்திரன் அவர்களைச் சந்தித்து மனு அளித்தனர். அலுவலக வாயிலில் செய்தியாளர்களைச் சந்தித்து மனு அளித்து வலியுறுத்தியுள்ளதை, மார்ச் 20 அன்று தமிழக எல்லை செங்கோட்டையில் இராமராஜ்ஜிய இரதயாத்திரையை எதிர்த்த தடுப்பு மறியலை மீண்டும் அறிவித்தனர்.
தலைவர்களே! தோழர்களே!
#செங்கோட்டை_தடுப்பு_மறியலை வெற்றிபெறச் செய்வோம்!
இராமராஜ்ஜிய இரத யாத்திரையை தடுத்து நிறுத்துவோம்!
- மீ.த.பாண்டியன், ஒருங்கிணைப்பாளர், காவிபயங்கரவாத_எதிர்ப்பு_மக்கள்_கூட்டமைப்பு_தமிழ்நாடு
மார்ச் 20 இராமராஜ்ஜிய இரத யாத்திரை எதிர்ப்பு செங்கோட்டை தடுப்பு மறியல் மார்ச் 20 இராமராஜ்ஜிய இரத யாத்திரை எதிர்ப்பு செங்கோட்டை தடுப்பு மறியல் Reviewed by நமதூர் செய்திகள் on 00:36:00 Rating: 5

No comments:

Powered by Blogger.