கர்ப்பிணிப் பெண் சாவுக்கு காரணமான காவலர் சிறையில் அடைப்பு!
திருச்சி (08 மார்ச் 2018): திருச்சியில் கர்ப்பிணிப் பெண் மரணத்திற்கு காரணமான போக்குவரத்து காவல் ஆய்வாளர் காமராஜ் சிறையில் அடைக்கப் பட்டுள்ளார்.
தஞ்சை மாவட்டம் பாபநாசம் பகுதியை சேர்ந்தவர் ராஜா(வயது 40). இவர் தனியார் வங்கியில் கலெக்ஷன் ஏஜெண்டாக பணியாற்றி வருகிறார். இவருடைய மனைவி உஷா(36). 10 வருடங்களாக குழந்தை இல்லாத உஷா, கடந்த 3 மாதங்களுக்கு முன்பு கர்ப்பம் அடைந்தார். ராஜா தனது மனைவியுடன் நேற்று மாலை 6.30 மணி அளவில் தஞ்சையில் இருந்து மோட்டார் சைக்கிளில் திருச்சி நோக்கி வந்தார்.
துவாக்குடி சுங்கச்சாவடி அருகே போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் காமராஜ் வாகன சோதனையில் ஈடுபட்டு இருந்தார். அவர் ராஜாவின் மோட்டார் சைக்கிளை நிறுத்தும்படி கூறினார். ஆனால் அவர் அதனை கவனிக்காமல் மோட்டார் சைக்கிளை தொடர்ந்து ஓட்டிச்சென்றார். இதனால் ஆத்திரம் அடைந்த இன்ஸ்பெக்டர் காமராஜ் ஜீப்பை எடுத்துக்கொண்டு ராஜாவின் மோட்டார் சைக்கிளை பின்னால் விரட்டிச் சென்றார்.
கர்ப்பிணிப் பெண் சாவுக்கு காரணமான காவலர் சிறையில் அடைப்பு!
Reviewed by நமதூர் செய்திகள்
on
00:12:00
Rating:
No comments: