2017 வகுப்புவாத வன்முறைகள்: உ.பி முதலிடம்!
2017ஆம் ஆண்டில் வகுப்புவாத வன்முறைகள் அதிகம் நிகழ்ந்த மாநிலங்களில் உத்தரப் பிரதேசம் முதலிடத்தைப் பிடித்துள்ளது.
மதக் காரணங்கள், நிலம் மற்றும் சொத்துத் தகராறுகள், பாலியல் அத்துமீறல்கள், சமூக வலைத்தளக் கருத்துக்கள் ஆகியவற்றால் நாடு முழுவதும் நடந்த வகுப்புவாத வன்முறைகளில் உத்தரப் பிரதேச மாநிலம் முதலிடத்தில் உள்ளது.
மக்களவையில் மத்திய உள்துறை இணையமைச்சர் ஹன்ஸ்ராக் கங்காராம் அகிர், உறுப்பினரின் கேள்விக்கு எழுத்துமூலம் பதிலளித்தார். அப்போது, “2017ஆம் ஆண்டு நாடு முழுவதும் 822 வகுப்புவாத வன்முறைகள் நிகழ்ந்துள்ளன. அதன்படி, உத்தரப் பிரதேசத்தில் 195வன்முறைகளும், கர்நாடகத்தில் 100வன்முறைகளும், ராஜஸ்தானில் 91வன்முறைகளும், பீகாரில் 85 வன்முறைகளும், மத்தியப் பிரதேசத்தில் 60 வன்முறைகளும் நிகழ்ந்துள்ளன” எனத் தெரிவித்துள்ளார்.
2016ஆம் ஆண்டு 703 வகுப்புவாத வன்முறைகள் நிகழ்ந்துள்ளன. உத்தரப் பிரதேசத்தில் 162 வன்முறைகளும், கர்நாடாகத்தில் 101 வன்முறைகளும், மகாராஷ்டிராவில் 68 வன்முறைகளும், பீகாரில் 65 வன்முறைகளும், ராஜஸ்தான் 63 வன்முறைகளும் நிகழ்ந்துள்ளன. 2015ஆம் ஆண்டு 751 வகுப்புவாத வன்முறைகள் நிகழ்ந்துள்ளன.
2017 வகுப்புவாத வன்முறைகள்: உ.பி முதலிடம்!
Reviewed by நமதூர் செய்திகள்
on
00:23:00
Rating:
No comments: