மீண்டும் பார்வையற்றோர் சங்கம் போராட்டம்!
தமிழகம் முழுவதும் 22 கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடத்தப்படும் என்று பார்வையற்றோர் சங்கம் அறிவித்துள்ளது.
கல்லூரி பட்டதாரிகள், பார்வையற்றோர் என 3,000க்கும் மேற்பட்டோர் உள்ளனர். அவர்கள் சங்கம் சார்பில், பார்வையற்ற, ஊனமுற்ற பட்டதாரிகளுக்கான வேலைவாய்ப்பு உள்ளிட்ட, 22 அம்ச கோரிக்கைகள் குறித்து, தமிழக அரசுக்குத் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். இருப்பினும் இவர்களது கோரிக்கைகளுக்கு அரசு செவி சாய்ப்பதாகத் தெரியவில்லை.
இந்நிலையில் மீண்டும் போராட்டம் நடத்தவுள்ளதாகப் பார்வையற்றோர் சங்கம் இன்று (மார்ச் 21) அறிவித்துள்ளது. இச்சங்கத்தின் தலைவர் பட்டாபிராமன், பொதுச்செயலாளர் சிங்காரவேலன் அளித்துள்ள பேட்டியில், பார்வையற்ற முதுகலை பட்டதாரிகளுக்கு ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் பணி நியமனம் வழங்கவேண்டும், வேலையில்லாதவர்களுக்கு வழங்கப்படும் உதவித்தொகையை ரூ.2 ஆயிரமாக உயர்த்தவேண்டும், உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்திப் போராடி வருகிறோம்.
இந்தக் கோரிக்கைகள் குறித்து முதல்வரிடம் வலியுறுத்தினோம். ஆனால் முதல்வர் உறுதியளித்தபடி எந்த வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. பட்ஜெட்டிலும் மாற்றுத் திறனாளிகளுக்காக எந்த வித திட்டம் குறித்தும் அறிவிக்கப்படவில்லை.
எனவே பட்ஜெட் கூட்டத்தொடர் முடியும் முன் எங்கள் கோரிக்கைகள் குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் இல்லையெனில் தமிழகம் முழுவதும் எங்களது போராட்டம் தீவிரமடையும் என்று கூறினர்.
மீண்டும் பார்வையற்றோர் சங்கம் போராட்டம்!
Reviewed by நமதூர் செய்திகள்
on
03:53:00
Rating:
No comments: