பொதுத் துறை வங்கிகளுக்கு ரூ.2,450 கோடி இழப்பு!
2013ஆம் ஆண்டு முதல் 2016ஆம் ஆண்டு வரையிலான நான்காண்டு காலத்தில் இந்திய பொதுத் துறை வங்கிகளுக்கு ஊழியர்கள் மோசடி வாயிலாக ரூ.2,450 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
இதுகுறித்து ரிசர்வ் வங்கியிடம் டைம்ஸ் ஆஃப் இந்தியா ஊடகம், இந்தியாவின் பல மாநிலங்களில் ஊழியர்கள் மீதுள்ள வழக்குகள் குறித்து தகவல்கள் திரட்டியுள்ளது. இந்தத் தகவல்களின்படி, ‘2013ஆம் ஆண்டு முதல் 2016ஆம் ஆண்டு வரையிலான நான்காண்டு காலத்தில் இந்திய பொதுத் துறை வங்கிகளுக்கு ரூ.2,450 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது. ரூ.1 லட்சம் முதல் அதற்கு மேற்பட்ட தொகை வரை சுமார் 1,232 பேர் முறைகேட்டில் ஈடுபட்டுள்ளனர். இதில் மகாராஷ்டிராவில் 49 சதவிகிதம் பேரும், ராஜஸ்தானில் 3 சதவிகிதம் பேரும் ஈடுபட்டுள்ளனர்.
இதனால் ராஜஸ்தானில் ரூ.1,096 கோடி வங்கிகளுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளது. மகாராஷ்டிராவில் நடந்த மோசடிகளில் 19 சதவிகிதம் மட்டமே பண இழப்பு ஏற்பட்டுள்ளது. டெல்லி, சண்டிகர், மேற்கு வங்கம் உள்ளிட்ட மாநில வங்கிகளுக்கும் இழப்பு ஏற்பட்டுள்ளது. ஒட்டுமொத்தமாக நாடு முழுவதும் உள்ள பொதுத்துறை வங்கிகளுக்கு 2016ஆம் ஆண்டு வரையிலான நான்காண்டுகளில் ரூ.2,450 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது. இதேபோல, தமிழ்நாட்டிலும் நடந்த பல மோசடிகளில் ஊழியர்களின் பங்களிப்பும் உள்ளது’ என்பது வெளிப்பட்டுள்ளது.
இந்தத் தரவுகளின்படி ராஜஸ்தான் உள்ளிட்ட சில மாநிலங்கள் மட்டும்தான் அதிகளவில் பணத்தை இழந்துள்ளன. ஆனால், இவற்றுடன் தென்மாநிலங்களுக்கும் சில தொடர்புகள் இருப்பதாக டைம்ஸ் ஆஃப் இந்தியா ஊடகம் தெரிவித்துள்ளது.
பொதுத் துறை வங்கிகளுக்கு ரூ.2,450 கோடி இழப்பு!
Reviewed by நமதூர் செய்திகள்
on
02:55:00
Rating:
No comments: