20 ரூபாய் மருத்துவர் காலமானார்!

20 ரூபாய் மருத்துவர் காலமானார்!

சென்னை மந்தைவெளியைச் சேர்ந்த 20 ரூபாய் மருத்துவர் நேற்று (அக்டோபர் 3) காலமானார்.
மந்தைவெளியில் வசித்து வந்த மருத்துவர் ஜெகன்மோகன்(77), பல ஆண்டுகளாக மிகக்குறைந்த விலையில் மக்களுக்கு மருத்துவம் பார்த்து வந்தார். 1990ஆம் ஆண்டு வரை தன்னிடம் மருத்துவம் பார்க்க வருபவர்களிடம், இவர் 2 ரூபாய் மட்டும் பெற்று வந்தார். 1999ஆம் ஆண்டு முதல் சிகிச்சைக் கட்டணத்தை ரூ.5 ஆக உயர்த்தினர். நோயாளிகளுக்கு ஊசி போட வேண்டுமானால், அந்த மருந்தின் விலைக்கேற்ப நோயாளிகளிடம் ரூ.10 அல்லது ரூ.15 வாங்குவார்.
சில ஆண்டுகள் கழித்து, தனது சிகிச்சைக் கட்டணத்தை ரூ.20 ஆக உயர்த்தினார். இவ்வாறு மக்களுக்கு குறைந்த விலையில் சிறந்த சேவையை செய்து வந்த இவர், கடந்த செவ்வாய்க்கிழமை (அக்டோபர் 2) மதியம் 1 மணி வரை நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து வந்துள்ளார்.
இதையடுத்து, மாலையில் உடல்நிலை சரியில்லாமல் ஆனதையடுத்து, அருகிலிருந்த மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சிகிச்சை பலனின்றி நேற்று (அக்டோபர் 3) அவர் காலமானார்.
“எங்கள் பையில் பத்து ரூபாயை வைத்துக் கொண்டு அவரிடம் சிகிச்சை பெற செல்வோம். பணம் இல்லையென்றால், இலவசமாக சிகிச்சை அளித்து மாத்திரையும் இலவசமாக தருவார்” என ஆட்டோ டிரைவர் கபாலி கூறினார்.
மருத்துவச் சான்றிதழ் பெறுவதற்கு, இவரிடம் பல நிறுவனங்களும், ஊழியர்களும் வருவதுண்டு. “மருத்துவச் சான்றிதழுக்கு வெறும் 10 ரூபாய்தான் வாங்குவார். அதிகமான மாத்திரைகளையும் கொடுக்கமாட்டார்” என்று அவரிடம் சிகிச்சை பெற்று வந்த ஸ்ரீதர் கூறினார்.
20 ரூபாய் மருத்துவர் காலமானார்! 20 ரூபாய் மருத்துவர் காலமானார்! Reviewed by நமதூர் செய்திகள் on 04:22:00 Rating: 5

No comments:

Powered by Blogger.