சங்கர் ஐஏஎஸ் அகாடமி நிறுவனர் தற்கொலை!

சங்கர் ஐஏஎஸ் அகாடமி நிறுவனர் தற்கொலை!

சென்னையிலுள்ள சங்கர் ஐஏஎஸ் அகாடமியின் நிறுவனர் சங்கர் தேவராஜன், நேற்றிரவு தூக்கிலிட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.
சென்னை அண்ணாநகரில் செயல்பட்டு வருகிறது சங்கர் ஐஏஎஸ் அகாடமி. இதில் படித்த 900க்கும் மேற்பட்ட மாணவர்கள், இந்தியாவெங்கும் ஐஏஎஸ், ஐஆர்எஸ் உட்படப் பல்வேறு ஆட்சிப்பணி அதிகாரிகளாகப் பணியாற்றி வருகின்றனர். இந்த அகாடமியின் நிறுவனர் சங்கர் தேவராஜன், திருச்செங்கோடு அருகே உள்ள நல்லன்கவுண்டம்பாளையம் கிராமத்தில் பிறந்தவர். அதன்பின், இவரது குடும்பத்தினர் ஊத்தங்கரைக்கு இடம்பெயர்ந்தனர். வறுமையான குடும்பப் பின்னணியிலிருந்து வந்த இவர், நன்றாகப் படிக்கும் இயல்பைக் கொண்டிருந்தார். பதின்வயதில், இவருக்கு சினிமாவில் இயக்குநராகும் ஆசை வந்தது. இதனால், இவர் படிப்பில் சரியாகக் கவனம் செலுத்தவில்லை.
காதல் திருமணம்
இவர், மதுரை வேளாண்மைக் கல்லூரியில் பட்டப்படிப்பு படித்தார். அப்போது, தன்னை ராக்கிங் செய்தார் என்று வைஷ்ணவி என்ற மாணவி சங்கர் மீது புகார் அளித்தார். இதனால், கல்லூரியில் இருந்து சங்கர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். ஆனால், பின்னாளில் வைஷ்ணவியும் சங்கரும் ஒருவரையொருவர் காதலித்தனர்; திருமணம் செய்ய முடிவு செய்தனர். இந்த திருமணத்துக்கு, இருவீட்டாரும் எதிர்ப்பு தெரிவித்தனர். சங்கர் கொங்கு வெள்ளாள சமூகத்தைச் சேர்ந்தவர்; வைஷ்ணவி பிராமண சமூகத்தைச் சேர்ந்தவர் என்பதே இதன் பின்னிருந்த காரணம். இதனை மீறி இருவரும் திருமணம் செய்துகொண்டனர். சில காலம் கழித்து, இரு வீட்டாரும் இவர்களை ஏற்றுக்கொண்டனர்.
ஐஏஎஸ் கனவு
இடைப்பட்ட காலத்தில், கல்லூரிப் படிப்பை முடித்தார் சங்கர். ஐஏஎஸ் ஆக வேண்டுமென்று விருப்பம் கொண்டார். நான்கு முறை சிவில் சர்வீஸ் தேர்வு எழுதினார். அனைத்திலும் தோல்வி அடைந்தார். இதன்பிறகு, தன்னைப் போன்ற மாணவர்களுக்காக ஒரு ஐஏஎஸ் பயிற்சி மையம் ஆரம்பிக்க முடிவெடுத்தார்; சென்னையில் சங்கர் ஐஏஎஸ் அகாடமியைத் தொடங்கினார்.
தன் தாய் தந்த 720 ரூபாயில் இதனை ஆரம்பித்தார் சங்கர். தமிழகம் முழுக்கப் பிரபலமாக இருந்துவரும் சங்கர் ஐஏஎஸ் அகாடமி ஆரம்பிக்கப்பட்டு, தற்போது 14 ஆண்டுகள் ஆகிறது.
குறைவான நட்பு வட்டம்
அரசியல், சமூகப் பிரபலங்கள் இடையே நல்ல அறிமுகம் உடையவர் சங்கர். ஆனாலும், சிறிய அளவிலேயே நட்பு வட்டம் கொண்டவர். மற்றவர்களிடம், இவர் வெளிப்படையாகப் பேசிப் பழகமாட்டார் என்று கூறப்படுகிறது. தனது பணிகளை முடித்துவிட்டு, இரவு 7-8 மணியளவில் வீடு திரும்புவது இவரது வழக்கம். இரவு 9 மணிக்கு மேல், யாருடைய போன் கால்களையும் இவர் அட்டெண்ட் செய்ய மாட்டார் என்கின்றனர் இவரது நண்பர்கள்.
மீறிப் பேச வேண்டியிருந்தால் கூட, காலையில் பேசுவதாக எஸ்எம்எஸ் அனுப்புவது சங்கரின் வழக்கம். அதேபோல, சில ஆண்டுகளாகவே இரவு வேளையில் சங்கர் மது அருந்தும் பழக்கத்தை மேற்கொண்டு வந்ததாகக் கூறப்படுகிறது. சங்கரின் உறவினர்கள் நல்லன்கவுண்டம்பாளையத்தில் இருந்து வருகின்றனர். இதனால், சென்னையில் அவர் தன் மனைவியின் உறவினர்களுடன் வசித்து வந்தார்.
மனவருத்தத்தில் சங்கர்
சமீபத்தில் சங்கர் ஐஏஎஸ் அகாடமியானது வருமான வரித் துறை அதிகாரிகளின் சோதனையில் சிக்கியது. இதுகுறித்து விளக்கம் கேட்க, அகாடமியில் படித்த சில முன்னாள் மாணவர்களைத் தொடர்பு கொண்டுள்ளார் சங்கர். அவர்கள், சரியான பதிலை அளிக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் சங்கர் வருத்தத்தில் இருந்துள்ளார்.
சில நாட்களாக, சங்கருக்கும் அவரது மனைவி வைஷ்ணவிக்கும் இடையே பிரச்சினை இருந்து வந்ததாகச் சொல்லப்படுகிறது. இந்த நிலையில், நேற்று (அக்டோபர் 11) இரவு சங்கர் மது அருந்தியுள்ளார். வீட்டிலிருந்த மின்விசிறியில் தூக்கிலிட்டுத் தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதனைப் பார்த்ததும் அதிர்ச்சி அடைந்தனர் அவரது குடும்பத்தினர். உடனடியாக அவரை மீட்டு, தனியார் மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள், சங்கர் ஏற்கனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்துள்ளனர்.
இதைத் தொடர்ந்து, சங்கரின் உடல் பிரேதப் பரிசோதனைக்காகச் சென்னை ராயப்பேட்டை மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அவரது உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. சங்கர் மரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கல்வி நிறுவனம் நடத்திவந்த வகையில், சங்கருக்குப் பெரிய அளவில் பண நெருக்கடியோ, கடன் பிரச்சினைகளோ இல்லை என்று கூறப்படுகிறது. இந்த நிலையில், குடிபோதையில் அவர் தற்கொலை செய்துகொண்டாரா என்ற கோணத்தில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்
சங்கர் ஐஏஎஸ் அகாடமி நிறுவனர் தற்கொலை! சங்கர் ஐஏஎஸ் அகாடமி நிறுவனர் தற்கொலை! Reviewed by நமதூர் செய்திகள் on 04:20:00 Rating: 5

No comments:

Powered by Blogger.