2002 குஜராத் கலவரங்கள்: அதிர்ச்சி தகவல்கள்!
2002இல் குஜராத்தில் நடைபெற்ற கலவரங்களில் அரசு உதவியிருந்தால் குறைந்த பட்சம் 300 உயிர்களையாவது காப்பாற்றியிருக்க முடியும் என்று இந்திய ராணுவத்தின் ஓய்வுபெற்ற துணை தளபதி ஜெனரல் ஷா தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக தனது அனுபவங்களைத் தொகுத்து ஜெனரல் ஷா சுயசரிதை எழுதியுள்ளார். அந்த நூலில் குஜராத்தில் நடந்தவற்றை விவரித்துள்ளார். இதனைத் தொடர்ந்து அவரை என்டிடிவி பேட்டி கண்டது. அந்தப் பேட்டியில் அவர் கூறியுள்ளதாவது:
2002 மார்ச் 1ஆம் தேதி அன்று கலவரம் தொடங்கிய மறுநாளே அகமதாபாத்தின் விமான நிலையத்தில் 3,000 ராணுவ வீரா்களைக் கொண்ட படையுடன் இறங்கினோம். அப்போது குஜராத் முழுவதும் கலவரங்களினால் பற்றி எரிந்து கொண்டிருந்தது. நாங்கள் கலவரப் பகுதிகளுக்குச் செல்வதற்கு எந்தப் போக்குவரத்தும் இல்லை. உடனே குஜராத் மாநில அரசின் தலைமை அதிகாரிகளுக்குத் தகவல் அளித்தோம். ஆனால், எந்தப் போக்குவரத்து ஏற்பாடுகளும் செய்யப்படவில்லை. நாங்கள் ஒருநாள் முழுவதும் விமான நிலையத்திலேயே ராணுவத்துருப்புகளுடன் காத்திருந்தோம்.
விமான நிலையத்தில் காத்திருந்த எங்கள் கண் எதிரே தொலைவில் பல இடங்களில் தீ கொழுந்து விட்டு எரிந்து கொண்டிப்பதைப் பார்த்தோம். துப்பாக்கியால் சுடப்படும் சத்தங்களும் கேட்டுக் கொண்டிருந்தன. இவற்றைப் பார்த்துக்கொண்டும் கேட்டுக்கொண்டும் எங்களால் எதுவும் செய்ய முடியாத நிலையில் நின்று கொண்டிருந்தோம். மறுநாள் தான் எங்களது துருப்புகள் கலவரப் பகுதிகளுக்குச் செல்வதற்கு போக்குவரத்து ஏற்பாடுகள் செய்யப்பட்டன. ஒருநாள் முன்னதாக நாங்கள் வந்து இறங்கியவுடன் போக்குவரத்து ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தால் குறைந்தபட்சம் 300 உயிர்களையாவது காப்பாற்றியிருக்க முடியும். இது அரசு நிர்வாகத்தின் தோல்வியாகும்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
2002 குஜராத் கலவரங்கள்: அதிர்ச்சி தகவல்கள்!
Reviewed by நமதூர் செய்திகள்
on
04:28:00
Rating:
No comments: