சர்ச்சை வீடியோ: மோகன் சி லாசரஸ் விளக்கம்!

சர்ச்சை வீடியோ: மோகன் சி லாசரஸ் விளக்கம்!

இந்து கடவுள்கள் மற்றும் கோயில்களை விமர்சித்ததாகச் சமூக வலைதளங்களில் எழுந்த சர்ச்சைகளினால் போலீசாரின் தேடுதலுக்கு ஆளான கிறிஸ்துவ மத போதகர் மோகன் சி லாசரஸ், தனது விளக்கத்தை வீடியோ வடிவில் வெளியிட்டுள்ளார்.
நடந்த சம்பவம் குறித்து, அவர் பேசிய வீடியோவில் கூறியிருப்பதாவது: “வாட்ஸ்அப் மற்றும் சமூக வலைதளங்களில் நான் பேசியதாகச் சில செய்திகளை ஊடகங்கள் வெளியிட்டிருக்கின்றன. அதில், இந்து தெய்வத்தை, இந்து மதத்தை இழிவுபடுத்திப் பேசியதாகக் கூறியுள்ளனர். அந்த செய்தியில் இந்து மதத்தை இழிவுபடுத்தியோ, இந்து தெய்வத்தை இழிவுப்படுத்தியோ பேசவில்லை. இந்த செய்தி எந்த தேதியில், யாருக்காகச் சொல்லப்பட்டது என்ற தகவலையும் ஊடகங்கள் சொல்லவில்லை. இது பொது இடத்தில் பேசக்கூடிய காரியம் இல்லை.
நான் எந்த பொதுக்கூட்டத்திலும் அப்படி பேசியதும் இல்லை. சில ஆண்டுகளுக்கு முன்னால் சென்னையில் கிறிஸ்துவ ஊழியர்கள் ஒரு சிறு கூட்டமாகக் கூடியிருந்தபோது இந்தியாவின் மத நம்பிக்கை குறித்து வேதம் சொல்லுகிற காரியம் குறித்து, அவர்களுக்கு விளக்கம் அளித்தேன். கிறிஸ்துவத்தை விசுவாசிக்கிறவர்கள் வேதப் புத்தகத்தில் என்ன சொல்லப்பட்டிருக்கிறதோ, அதை அப்படியே ஏற்றுக்கொள்கிறவர்கள். ஆகவே, அது வெளியில் மற்றவர்களுக்குச் சொல்லப்பட்ட விஷயமல்ல. ஆனால், இந்த செய்தியை மட்டும் கட் பண்ணி, அவர்களுக்கு ஏற்றவிதமாக யாரோ சிலர் இந்து மதத்தையும் இந்து தெய்வத்தையும் இழிவுபடுத்தியதாகச் செய்தியைப் பரப்பிக் கொண்டிருக்கின்றனர்” என்று அதில் தெரிவித்துள்ளார். தன்னிடத்தில் ஆயிரக்கணக்கான இந்து மக்கள் பிரார்த்தனைக்காக வருவதாகவும், ஒருவரிடத்திலும் அவரது மதத்தையோ, தெய்வத்தையோ குறித்துத் தான் பேசியதில்லை என்றும் அவர் தன் விளக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.
“ஏசுவை மட்டும் கூறி பிரார்த்தனை செய்வது மட்டுமே என்னோட வேலை. எந்த பொது இடத்திலயும் பிற மதத்தைக் குறித்தோ, தெய்வங்களைக் குறித்தோ பேசியதேயில்லை. எங்களுக்குள் பேசப்பட்ட வார்த்தை. இதைச் சிலர் சுய விளம்பரத்துக்காக இப்பொழுது பரப்பிக் கொண்டிருக்கின்றனர்.
என்னுடைய சொந்த சகோதரிகள் இன்னும் இந்துவாகத் தான் இருக்கிறார்கள். அவர்களை நான் மதம் மாற்றவில்லை. குறிப்பிட்ட சங்கத்தைச் சேர்ந்தவர்கள், ஒரு அமைப்பைச் சார்ந்தவர்கள், அவர்கள் தீவிரமாக இருப்பதை அறிந்திருக்கின்றனர். நான் பேசியதாக பரப்பிய செய்தியைக் கேட்டு இந்து சகோதர, சகோதரிகள் வருத்தப்பட்டிருந்தால், அதற்காக நான் வருத்தமடைகிறேன். உங்களை வேதனைப்படுத்துவதோ, உங்களது நம்பிக்கையை இழிவுப்படுத்துவதோ எங்களுடைய நோக்கமல்ல” என்று மோகன் சி லாசரஸ் தனது வீடியோவில் விளக்கமளித்துள்ளார்.
சர்ச்சை வீடியோ: மோகன் சி லாசரஸ் விளக்கம்! சர்ச்சை வீடியோ: மோகன் சி லாசரஸ் விளக்கம்! Reviewed by நமதூர் செய்திகள் on 04:17:00 Rating: 5

No comments:

Powered by Blogger.