பத்திரிகையாளர் கொலைகள் இந்தியாவில் அதிகரிப்பு!
உலக அளவில் பத்திரிகையாளர்கள் கொல்லப்படும் நாடுகளில் இந்தியா 14ஆவது இடத்தில் இருப்பதாகப் பத்திரிகையாளர்களைப் பாதுகாக்கும் கமிட்டியின் அறிக்கை தெரிவித்துள்ளது.
வரும் நவம்பர் 2ஆம் தேதியானது உலகளவில் பத்திரிகையாளர்களுக்கு எதிரான குற்றங்களை இழைப்பவர்கள் தப்பித்துக் கொள்வதற்கு முடிவு கட்டும் நாளாகக் கடைப்பிடிக்கப்படுகிறது. இதையொட்டி பத்திரிகையாளர்கள் பாதுகாப்புக் கமிட்டி ஆண்டறிக்கையை வெளியிட்டுள்ளது. இந்த அறிக்கையில் கூறியுள்ளதாவது:
உலக அளவில் பத்திரிகையாளர்கள் கொல்லப்பட்ட 18 வழக்குகளில் இன்னும் குற்றவாளிகள் கண்டுபிடிக்கப்படவில்லை. இந்த வகையில் உலகளவில் சோமாலியா, சிரியா, ஈராக், பாகிஸ்தான் மற்றும் வங்கதேசம் ஆகிய நாடுகளின் வரிசையில் இந்தியா 14ஆவது இடத்தில் இருக்கிறது.
பத்திரிகையாளர்கள் கொலைகளில் நீதி கிடைக்காமல் இருப்பது மிகக்கடுமையான பத்திரிகை தணிக்கை முறையே. கடந்த 10 ஆண்டுகளில் 324 பத்திரிகையாளர்கள் கொலைகளின் மூலம் மவுனிக்க வைக்கப்பட்டுள்ளனர். இதில் 85 விழுக்காடு வழக்குகளில் குற்றவாளிகள் தண்டிக்கப்படவில்லை. இது ஊடகத்தைக் கட்டுப்படுத்துவதற்கான மறைமுகமான தந்திரமாகும்.
உலகளவில் கடந்த 2000இல் இருந்து 2018 வரையிலான காலகட்டத்தில் நடந்த பத்திரிகையாளர்கள் கொலைகளில் குற்றவாளிகள் தண்டிக்கப்படாத நாடுகளில் முதல் நாடாக சோமாலியாவும் அதனைத் தொடர்ந்து சிரியாவும், ஈராக்கும், தெற்கு சூடானும் மற்றும் பிலிப்பைன்ஸும் உள்ளன.
இவ்வாறு அந்த அறிக்கை கூறியுள்ளது.
பத்திரிகையாளர் கொலைகள் இந்தியாவில் அதிகரிப்பு!
Reviewed by நமதூர் செய்திகள்
on
23:42:00
Rating:
No comments: