மனிதர்களால் 60 சதவிகித விலங்குகள் அழிவு!

மனிதர்களால் 60 சதவிகித விலங்குகள் அழிவு!

மனிதர்களின் நடவடிக்கையால், 44 ஆண்டுகளில் 60 சதவிகித விலங்குகள் அழிந்துள்ளதாக உலக வன உயிரி நிதியம் தெரிவித்துள்ளது.
தி லிவிங் பிளானட் ரிப்போர்ட் ஆப் தி குளோபல் பண்ட் ஃபார் நேச்சர் என்ற பெயரில் உலக வன உயிரி நிதியம் நடத்திய ஆய்வு அறிக்கை வெளியிடப்பட்டது. இந்த ஆய்வுக்காக, 1970ஆம் ஆண்டிலிருந்து 2014ஆம் ஆண்டு வரை 16,704 விலங்குகள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டன. இதில் 4,005 வகை உயிரினங்கள் அடங்கியிருந்தன. 44 ஆண்டுகளில் மனிதர்களின் அதிகமான நுகர்வு மற்றும் செயல்பாடுகளினால் உலகில் உள்ள முதுகெலும்புள்ள விலங்குகளான பறவைகள், பாலூட்டிகள், மீன், நீர் நிலத்தில் வாழ்வன, ஊர்வன ஆகியவற்றில் 60 சதவிகித உயிரினங்கள் குறைந்துவிட்டன.
83 சதவிகித நன்னீர் உயிரினங்கள் மனிதர்களின் நடவடிக்கையால் அழிந்துவிட்டன. 20ஆம் நூற்றாண்டில்தான், உலகில் மிக அதிகபட்சமாக முதுகெலும்புள்ள விலங்குகள் அழிந்துள்ளன. மத்திய மற்றும் தென் அமெரிக்காவில் வாழும் முதுகெலும்புள்ள உயிரினங்களின் எண்ணிக்கை 89 சதவிகிதமாகக் குறைந்துவிட்டது.
இது குறித்து கருத்து தெரிவித்துள்ளார் உலக வன உயிரி நிதியத்தின் தலைமை நிர்வாகி தான்யா ஸ்டீல். “நாம் வாழ்ந்து கொண்டிருக்கும் கிரகத்தை அழிக்கும் முதல் தலைமுறையும் நாம்தான். அதேசமயத்தில், இதனைச் சரி செய்ய எந்த முயற்சியும் எடுக்கக்கூடிய கடைசி தலைமுறையும் நாம் தான். இயற்கை அழிவும், காலநிலை மாற்றமும் மனிதனுக்கு மிகப்பெரிய அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது. காலநிலை மாற்றம் துருவக் கரடிகளுக்கு மட்டும் ஆபத்தானதல்ல, பொருளாதாரம் மற்றும் சமுதாயத்திற்கும் ஆபத்துதான் என்பதை உணர வேண்டும்.
ஒவ்வொருவருக்கும் சுத்தமான காற்று, போதுமான உணவு வேண்டுமென்றால், அனைவரும் இயற்கையை மீட்கும் நடவடிக்கையில் உடனடியாக ஈடுபட வேண்டும். அனைவருக்கும் ஆரோக்கியமான, நிலையான எதிர்காலம் அமைவதற்கான சாத்தியமானது மழை, காடுகள், கடல்கள் மற்றும் ஆறுகள் போன்றவை செழிப்பாக இருப்பதில்தான் இருக்கிறது.
நடைபெறவிருக்கும் 195 நாடுகளுக்கான தேசியக் கூட்டமைப்பின் மாநாடு, ஒரு புரட்சியின் ஆரம்பமாகப் பார்க்கப்படுகிறது. இது, 2020ஆம் ஆண்டில் இயற்கைக்கான புதிய ஒப்பந்தம்” என்று அவர் தெரிவித்துள்ளார்.
மனிதர்களால் 60 சதவிகித விலங்குகள் அழிவு! மனிதர்களால் 60 சதவிகித விலங்குகள் அழிவு! Reviewed by நமதூர் செய்திகள் on 23:45:00 Rating: 5

No comments:

Powered by Blogger.