பாபர் மசூதி வழக்கு: ஜனவரிக்கு ஒத்தி வைப்பு!
பாபர் மசூதி- ராமர் கோயில் பிரச்சினை தொடர்பான வழக்கின் விசாரணையானது அடுத்த ஆண்டு ஜனவரி முதல் வாரத்தில் நடத்தப்படும் என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பான வழக்கின் விசாரணையானது இன்று (அக்-29) உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் முன் நடைபெற்றது. அப்போது அவர் கூறுகையில், இவ்வழக்கை விட முக்கியமான பிரச்சினைகள் நீதிமன்றத்திற்கு முன்பாக உள்ளன. ஆதலால் இந்த வழக்கின் விசாரணையை வரும் ஆண்டின் ஜனவரி மாதத்தில் நீதிமன்றத்தின் உரிய அமர்வு எடுத்துக் கொள்ளும். என்று தெரிவித்தார். , இதன் மூலம் 100 ஆண்டு காலப்பிரச்சினையில் உரிய அமர்வு அமைக்கப்பட்டு அதுதான் தீர்த்து வைக்கும் என்று சுட்டிக்காட்டியுள்ளார். ஆனால் அரசியல் வட்டாரங்களிலும் சட்ட நிபுணர்களினாலும் நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு பல்வேறு விளக்கங்கள் அளிக்கப்பட்டுள்ளன.
நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பு இப்பிரச்சினை தொடர்பாக மத்திய அரசு அவசரச் சட்டமொன்றை இயற்றுவதற்கு வழி வகுக்கும் என்று அரசியல் வட்டாரங்களில் எதிர்பார்க்கப்படுகின்றது. இதன் மூலம் பிரச்சினைக்கான தீர்வை மத்திய அரசிடம் நீதிமன்றம் ஒப்படைத்து விட்டதாகவும் அரசியல் சட்ட நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
16ஆம் நுாற்றாண்டில் கட்டப்பட்ட பாபா் மசூதியை 1992ஆம் ஆண்டில் இந்துத்துவ சக்திகள் இடித்து தள்ளினர். பாபா் மசூதி இடிக்கப்பட்ட இடத்தில் ராமர் கோயிலைக் கட்டுவோம் என ஆர்எஸ்எஸ்—பாஜகவினர் வாக்குறுதி அளித்து 1992லிருந்து தொடர்ந்து நடைபெற்ற அனைத்து தேர்தல்களிலும் பிரச்சாரம் செய்து வந்தனர். ஆனால் 1992லிருந்து தொடங்கிய பிரச்சினை எந்தவித தீர்வும் காணாமல் தொடர்ந்து நீடித்து வந்தது. இந்தப்பிரச்சினை தொடர்பாக பல மாநிலங்களில் மதக் கலவரங்களும் நடைபெற்றன. நீதிமன்றத்தில் பிரச்சினை தொடர்பாக தொடரப்பட்ட வழக்குகளின் விசாரணைகளும் நடந்து வந்தன.
2010இல் அலகாபாத் உயர்நீதிமன்றம் அந்த சர்ச்சைக்குரிய பாபர் மசூதி இடத்தை சன்னி வக்ஃப் வாரியம்,நிர்மோகி அஹகாரா மற்றும் ராம் லீலா ஆகிய மூன்று அமைப்புகளுக்கும் மூன்று பங்குகளாக பிரித்து கொடுப்பது என தீர்ப்பளித்தது. ஆனால் இந்த தீர்ப்பை எதிர்த்து பல வழக்குகள் தொடரப்பட்டுள்ளன.
இறுதியாக இப்பிரச்சினை ஒருவாறு தீர்வு காணப்படும் என்ற எதிர்பார்ப்பை அளித்தது செப்டம்பர் 27ஆம் தேதியன்று உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பு. அப்போது இவ்வழக்கின் விசாரணையை விரைவில் முடிக்க வேண்டும் என்று உத்தரப் பிரதேச மாவட்ட நீதிமன்றத்திற்கு உத்தரவிட்டது அதனால் இந்தப் பிரச்சினை விரைவில் தீர்க்கப்படும் என அனைவரும் எதிர்பார்த்தனர், ஆனால் இன்று உச்ச நீதிமன்றம் அடுத்த ஆண்டு ஜனவரிக்கு விசாரணையை ஒத்தி வைத்துள்ளது
பாபர் மசூதி வழக்கு: ஜனவரிக்கு ஒத்தி வைப்பு!
Reviewed by நமதூர் செய்திகள்
on
23:51:00
Rating:
No comments: