ரிசர்வ் வங்கிக்கு தன்னாட்சி வேண்டும்!

ரிசர்வ் வங்கிக்கு தன்னாட்சி வேண்டும்!

ரிசர்வ் வங்கிக்கு தன்னாட்சி சுதந்திரம் வேண்டுமென ரிசர்வ் வங்கி ஊழியர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
அக்டோபர் 26ஆம் தேதியன்று மும்பையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு பேசிய ரிசர்வ் வங்கியின் துணை ஆளுநர் வீரல் ஆச்சார்யா, “மத்திய (ரிசர்வ்) வங்கியின் சுதந்திரத்தைக் குறைப்பதன் விளைவுகள் மிகவும் ஆபத்தானதாக இருக்கும். கண்மூடித்தனமான நடவடிக்கைகளால் மூலதனச் சந்தைகளில் நம்பகத்தன்மை குறைந்துவிடும். மத்திய வங்கியின் சுதந்திரத்துக்கு மதிப்பு கொடுக்காத அரசுகள் நிதிச் சந்தைகளின் கோபத்துக்கு ஆளாகி, பொருளாதாரத் தீயை மூட்டி, மத்திய வங்கியின் அதிகாரங்களைக் குறைத்ததற்காக ஒரு நாள் வருத்தப்படும்” என்று பேசியிருந்தார்.
இந்நிலையில் வீரல் ஆச்சார்யாவின் கருத்து குறித்து வருத்தமடைந்துள்ளதாகவும், ரிசர்வ் வங்கி தன்னாட்சியுடன் செயல்பட வேண்டும் எனவும் அனைத்திந்திய ரிசர்வ் வங்கி ஊழியர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. அக்டோபர் 29ஆம் தேதியன்று அனைத்திந்திய ரிசர்வ் வங்கி ஊழியர்கள் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘நாட்டின் மத்திய வங்கியைச் சீர்குலைப்பது பேரழிவுக்கு வழிவகுக்கும். இதை மத்திய அரசு தவிர்க்க வேண்டும். ரிசர்வ் வங்கி மீது அரசு ஏறி மிதிப்பதற்குப் பதிலாக இருதரப்பும் பேச்சுவார்த்தை நடத்தி பிரச்சினைகளைத் தீர்க்கலாம். அரசின் முயற்சிகளுக்கு நாட்டையே விலை கொடுக்க வேண்டியிருக்கும்’ என்று கூறப்பட்டுள்ளது.
ரிசர்வ் வங்கிக்கு தன்னாட்சி வேண்டும்! ரிசர்வ் வங்கிக்கு தன்னாட்சி வேண்டும்! Reviewed by நமதூர் செய்திகள் on 23:49:00 Rating: 5

No comments:

Powered by Blogger.