2013-ஆம் ஆண்டு சமூக மேம்பாட்டிற்காக பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா செலவழித்த தொகை ரூ.9 கோடி!- தேசிய பொதுக்குழுவில் தகவல்!
2013-ஆம் ஆண்டு சமூக மேம்பாட்டிற்காக பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா செலவழித்த தொகை ரூ.9 கோடி!- தேசிய பொதுக்குழுவில் தகவல்!
கோழிக்கோடு: 2013-ஆம் ஆண்டு பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா கல்வி, பொருளாதார மேம்பாடு உள்ளிட்ட சமூக மேம்பாட்டு பணிகளுக்காக ரூ.9 கோடியை செலவழித்துள்ளது. கேரள மாநிலம் புத்தணத்தாணியில் நடந்த வருடாந்திர தேசிய பொதுக்குழு கூட்டத்தில் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது. சமூக-வளர்ச்சி துறையில் இயக்கம் கூடுதல் கவனம் செலுத்தி வருவதாகவும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. பள்ளிக்கூட மாணவர்களுக்கு தேவையான ஸ்கூல் கிட் விநியோகம், ஓராசிரியர் பள்ளிக்கூடங்கள், வட்டி இல்லாத சிறு கடன்கள், சர்வ சிக்ஷா கிராமம், கல்வி உதவித்தொகை ஆகிய திட்டங்கள் பல்வேறு மாநிலங்களில் நடைமுறைப்படுத்தப்பட்டன.
20 ஆண்டுகளை நிறைவுச் செய்துள்ள பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா, புதிய துறைகளில் தனது பணிகளை விரிவுப்படுத்த வேண்டும் என்று இதுத் தொடர்பான விவாதத்தில் பங்கேற்ற பிரதிநிதிகள் வலியுறுத்தினர். ஊடகம் மற்றும் சமூக இணைய தளங்களில் எதிர்பார்த்ததை போல இயக்கம் முன்னேறவில்லை. ஆனால், மாணவர்கள் மற்றும் முஸ்லிம் மார்க்க அறிஞர்கள் மத்தியில் நல்லதொரு முன்னேற்றம் கண்டுள்ளது.’
சுதந்திரத்தின் ஒரு நூற்றாண்டு’ என்ற கலந்துரையாடல் நிகழ்ச்சியில் வரும் ஆண்டுகளில் தேசம் எதிர்கொள்ளும் முக்கிய சவால் தொழில் நுட்ப புரட்சியால் உருவாகும் ஸ்திரத்தன்மையற்ற சூழலாகும் என்று பெரும்பாலான பிரதிநிதிகளும் கருத்து தெரிவித்தனர்.பொதுக்குழுவின் இறுதியாக உரை நிகழ்த்திய பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் முன்னாள் தேசிய தலைவர் இ.அபூபக்கர் தனது உரையில்,’சமூக இணையதளங்களில் இணைந்து அநீதிக்கு எதிராக தனிப்பட்ட ரீதியில் எதிர்ப்பை பதிவுச் செய்து அடங்கியிருக்கும் புதிய தலைமுறையினரை சமூக யதார்த்தங்களின் பால் அழைத்து வருவதுதான் இயக்கத்தின் தற்போதைய பணி’ என்று குறிப்பிட்டார்.
- See more at: http://www.thoothuonline.com
2013-ஆம் ஆண்டு சமூக மேம்பாட்டிற்காக பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா செலவழித்த தொகை ரூ.9 கோடி!- தேசிய பொதுக்குழுவில் தகவல்!
Reviewed by நமதூர் செய்திகள்
on
00:34:00
Rating:
No comments: