வி.களத்தூரில் நேற்று நடைபெற்ற மாசி மகம் ஊர்வலத்தில் சிறிது சலசலப்பு!


வி.களத்தூரில் நேற்று (15/2/14)  காலை 11 மணிக்கு மேல் மாசி மகம் ஊர்வலம் பள்ளிவாசல் தெரு வழியாக சென்றது.

பொதுவாக ஊர்வலம் கடை வீதியில் இருந்து பள்ளிவாசல் வழியாக மேற்கு பகுதிக்கு சென்று மீண்டும் மெயின் ரோடு வழியாக கடைவீதிக்கு வந்து கிழக்கு கோவில் சென்றடையும்.
பள்ளிவாசல் வழியாக ஊர்வலம் செல்வது தொடர்பாக பல பிரச்சினை உள்ளதால் ஊர்வலத்தின் போது நூற்றுக்கும் மேற்ப்பட்ட போலிஸ் பாதுகாப்பு போடப்பட்டிருக்கும்.மேலும் பல நிபந்தனை அடிப்படையில் ஊர்வலத்திற்கு அரசு அனுமதி அளித்தது.வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
அடிக்கடி ஏதேனும் ஒரு பெயரில் ஊர்வலம் நடைபெறும் (சென்ற மாதம் பொங்கல் பண்டிகையின் போது ).அதேபோல் இந்த தடவை மாசி மகம் என்ற பெயரில் ஊர்வலம்  நடைபெற்றது.இந்த ஊர்வலம் காலை சுமார் 11 மணியளவில் கடைவீதியில் இருந்து புறப்பட்டு இஸ்லாமியர்கள் தெரு வழியாக சென்ற போது காகிதே மில்லத் திடல் அருகில் ஊர்வலத்தை நிறுத்தி ஆட்டம் போட்டனர்.(ஊர்வலம் தொடர்பாக அரசு அளித்த நிபந்தனை இஸ்லாமியர்கள் தெருவில் நிற்காமல் விரைவாக செல்ல வேண்டும் என்பதாகும் .) ஆனால் இன்று இவர்கள் ஊர்வலத்தை தெருவில் நிறுத்தி ஆட்டம் போட்டது மக்களிடம் வெறுப்பு ஏற்ப்படுத்தும் வண்ணம் இருந்து. இதனால் இரு தரப்பினரிடையே வாக்கு வாதம் ஏற்ப்பட்டு சிறு சலசலப்பு ஏற்ப்பட்டது.

காவல்துறையிடம் முறையீடு!
அதன் பிறகு இஸ்லாமியர்கள் காவல் துறையிடம் முறையிட்டனர்.இதனால் காவல் துறையினர் உடனடியாக அவர்களை விரைவாக செல்ல உத்தரவிட்டனர். காவல்துறையின் உடனடி நடைவடிக்கை எடுத்து அழைத்து சென்றதால் எந்த ஒரு அசம்பாவிதமும் நடக்காமல் காவல்துறை துரிதமாக செயல் பட்டது.
இன்று ஊர்வலத்திற்கு போலீசார் வழக்கத்தை விட குறைவாக வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
அரசின் நிலைப்பாடு என்ன?
அரசு விதித்த நிபந்தனை மீறி பொதுமக்களுக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் இரு பிரிவினைரிடையே மோதலை ஏற்ப்படுத்தும் வகையில் ஊர்வலத்தை நிறுத்தி ஆட்டம் போட்டுள்ளனர். இதனால் அரசு விதித்த நிபந்தனையை அலட்சிய படுத்தி உள்ளனர்.

இது தொடர்பாக அரசு நடுநிலையாக என்ன நடவடிக்கை எடுக்கும்?

நன்றி : vkalathur.com












வி.களத்தூரில் நேற்று நடைபெற்ற மாசி மகம் ஊர்வலத்தில் சிறிது சலசலப்பு! வி.களத்தூரில் நேற்று நடைபெற்ற மாசி மகம் ஊர்வலத்தில் சிறிது சலசலப்பு! Reviewed by நமதூர் செய்திகள் on 01:40:00 Rating: 5

No comments:

Powered by Blogger.