புத்தக திருவிழாவில் ரூ.40 லட்சம் மதிப்பிலான புத்தகங்கள் விற்பனை
பெரம்பலூர் புத்தக திருவிழாவை 65 ஆயிரத் திற்கும் மேற்பட்ட பார்வையாளர்கள் கண்டு களித்துள்ளனர். ரூ.40 லட்சம் மதிப்பிலான புத்தகங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன.
புத்தக திருவிழா
பெரம்பலூர் மாவட்டத்தில் தென்னிந்திய புத்தக் விற்பனையாளர்கள் மற்றும் பதிப்பாளர்கள் சங்கத்தின் ஆதரவுடனும், மாவட்ட நிர்வாகத்தின் ஒத்து ழைப்புடனும் பெரம்பலூர் மக்கள் பண்பாட்டு மன்றம், தேசிய புத்தக அறக்கட்டளை மற்றும் தனலட்சுமி சீனிவாசன் அறக்கட்டளை இணைந்து நடத்தும் பெரம்பலூர் புத்தகத்திருவிழா நகராட்சித் திடலில் நடைபெறுகிறது.
பல்வேறு சிறப்பம்சங்கள்
அனைத்து தலைப்பு களிலுமான புத்தகங்கள், குழந்தைகளுக்கான உலகத் திரைப்பட விழா, மொபைல் ஏ.டி.எம், உலகப் புகழ்ப்பெற்ற புத்தகங்கள், நாவல்கள், இலவச இரத்தம் மற்றும் சர்க்கரைப் பரிசோதனை என பல்வேறு சிறப்பம்சங்களுடன் நடந்து கொண்டிருக்கும் பெரம்பலூர் புத்தகத் திருவிழாவை பார்வையிட மக்கள் கூட்டம் நாளுக்கு நாள் பெருகி வருகிறது.
அறிவுத்திறன் போட்டிகள்
இப்புத்தக கண்காட்சியில் தினந்தோறும் குழந்தைகளுக்கு உலகப்புகழ்பெற்ற திரைப் படங்கள், குறும்படங்கள் மற்றும் ஆவணப்படங்கள் திரையிட்டு காட்டப்படுகிறது, பள்ளி மற்றும் கல்லூரி மாணவ மாணவிகளின் அறிவுத்திறனை வளர்க்கும் விதமாக அறிவுத்திறன் போட்டிகள் தினந்தோறும் நடத்தப்படுகின்றன,
கல்வி உபகரணங்களுக்காக பிரத்யேகமான அரங்கும் ஒதுக்கப்பட்டுள்ளது, இவை அனைத்தும் மாணவ மாணவிகளிடையே அமோக வரவேற்பை பெற்றுள்ளது. அதுமட்டுமல்லாமல், இரத்தப்பரிசோதனை, சர்க்கரைப்பரிசோதனை, மனஅழுத்தப்பரிசோதனை என அனைத்துப் பரிசோதனை களும் தினமும் இலவசமாக செய்யப்படுகிறது.
ரூ.40 லட்சம் மதிப்பில் புத்தகம் விற்பனை
இப்புத்தகத்திருவிழாவில் இதுவரை 65 அயிரத்திற்கும் மேற்பட்ட பார்வையாளர்கள், ரூ.40 லட்சம் மதிப்பிலான புத்தகங்கள் விற்பனை யாகியுள்ளன. மேலும் புத்தகங்களை வாங்கிட மக்கள் கூட்டம் அலைமோதுகிறது.
மேற்கண்ட தகவல் பெரம்பலூர் கலெக்டர் அலுவலக செய்திக்குறிப்பில கூறப்பட்டுள்ளது.
புத்தக திருவிழாவில் ரூ.40 லட்சம் மதிப்பிலான புத்தகங்கள் விற்பனை
Reviewed by நமதூர் செய்திகள்
on
19:37:00
Rating:
No comments: