நரேந்திர மோடி நேருக்கு நேர் பேச தயாரா - முலாயம் சிங் யாதவ் சவால்!


நரேந்திர மோடி நேருக்கு நேர் பேச தயாரா - முலாயம் சிங் யாதவ் சவால்!

லக்னோ: "உத்தரபிரதேசத்தில் வளர்ச்சிப் பணிகள் நடக்கவில்லை என்ற வதந்தியை நரேந்திர மோடி பரப்பி விட்டுள்ளார்.
இது தொடர்பாக மோடி ஒரே மேடையில் என்னுடன் நேருக்கு நேர் விவாதம் செய்ய தயாரா?" என்று சமாஜ்வாதி கட்சியின் முலாயம் சிங் யாதவ் தெரிவித்துள்ளார்.
உத்தரபிரதேச மாநிலம் லக்னோவில் நடைபெற்ற சமாஜ்வாதி கட்சியின் பிரசார கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய முலாயம் சிங் யாதவ் இதனைத் தெரிவித்தார்.
மேலும் அவர் தெரிவித்ததாவது, "நாடாளுமன்றத் தேர்தல் முடிந்த பிறகு காங்கிரஸ், பா.ஜ.க. அணிகளில் இல்லாத கட்சிகள் ஒருங்கிணைந்து 3வது அணியாக ஆட்சி அமைக்கும். 3வது அணியில் சமாஜ்வாதி கட்சி தலைமை ஏற்கும். சமாஜ்வாதி கட்சியை தவிர்த்து யாராலும் ஆட்சி அமைக்க வாய்ப்பே இல்லை.
ஜெயலலிதாவிடம் 39 தொகுதிகள் மட்டுமே உள்ளது. மம்தா பானர்ஜியிடம் 42 தொகுதிகள், நிதிஷ்குமாரிடம் 40 தொகுதிகளே உள்ளன. ஆனால், நம்மிடம் 80 தொகுதிகள் இருக்கின்றன. இந்த 80 தொகுதிகளில் சமாஜ்வாதி கட்சி பெரும்பாலான இடங்களில் வெற்றி பெற்றால், 3வது அணிக்கு தலைமை ஏற்கும் பொறுப்பு எனக்கு கிடைக்கும். அத்தகைய சூழ்நிலையில் 3வது அணி சார்பில் நானே பிரதமர் ஆவேன்."
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
நரேந்திர மோடி நேருக்கு நேர் பேச தயாரா - முலாயம் சிங் யாதவ் சவால்! நரேந்திர மோடி நேருக்கு நேர் பேச தயாரா - முலாயம் சிங் யாதவ் சவால்! Reviewed by நமதூர் செய்திகள் on 23:41:00 Rating: 5

No comments:

Powered by Blogger.