“வஞ்சிக்கப்படும் வட சென்னை”- எஸ்.டி.பி.ஐ கட்சி நடத்திய மனித சங்கிலி போராட்டம்!
“வஞ்சிக்கப்படும் வட சென்னை”- எஸ்.டி.பி.ஐ கட்சி நடத்திய மனித சங்கிலி போராட்டம்!
சென்னை மாநகரில் 75 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் வாழ்ந்து வருவதோடு, சுமார் 20 லட்சம் மக்கள் வெளி ஊர்களிலிருந்து பல்வேறு பணிகளுக்காக வந்து செல்கின்றனர். சென்னையின் வளர்ச்சி என்பது வட சென்னையை பொறுத்தவரை மிகவும் பின்தங்கிய நிலையிலேயே உள்ளது.
எத்தனையோ பிரபலமான தலைவர்கள் மக்கள் பிரதிநிதிகளாக இருந்து வந்த போதிலும் சென்னை மற்ற பகுதிகளை ஒப்பிடும்போது வட சென்னை பகுதி வளர்ச்சிப் பணிகளிலும், சாலை, குடிநீர், சுகாதாரம் உள்ளிட்ட அடிப்படை வசதிகளிலும் மிகவும் பின்தங்கிய நிலையே காணப்படுகிறது. இந்த அவலநிலையை மாற்றிட எழுப்பப்பட்ட பல்வேறு கோரிக்கைகள் கண்டு கொள்ளப்படாமலேயே உள்ளது.
இந்நிலையில் வட சென்னைக்குட்பட்ட ராயபுரம், பெரம்பூர், ஆர்.கே. நகர், திருவிக நகர், கொளத்தூர் மற்றும் திருவொற்றியூர் ஆகிய தொகுதிகளில் மக்களின் வாழ்க்கை நிலையைகுறித்து அறியவும், அவர்களுடைய அடிப்படை வசதிகளின் நிலையையும், அரசுசார் கல்விநிலையங்களின் தரத்தையும், கல்வி வசதிகள் குறித்து அறியும் பொருட்டும், சாலை வசதிகள், மேம்பாலங்கள், போக்குவரத்து போன்ற அத்தியாவசிய நிலையை அறிய எஸ்.டி.பி.ஐ கட்சியின் சார்பாக மக்களிடம் மாபெரும் சர்வே நடத்தப்பட்டது. இதன் மூலம் கிடைத்த தகவல்கள் சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. இது போன்ற அவலங்களை சீர் செய்யும் பொருட்டு வட சென்னை மாவட்ட எஸ்.டி.பி.ஐ கட்சி ”வஞ்சிக்கப்படும் வட சென்னை” என்கின்ற தொடர் பிரச்சார இயக்கத்தை இன்று முதல் மார்ச் 15 வரை நடத்த திட்டமிட்டுள்ளது.
இதன் துவக்கமாக மாநகராட்சி மற்றும் அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் இன்று (02-02-2014) வண்ணாரப்பேட்டை T.H சாலையில் மாபெரும் மனித சங்கிலி போராட்டம் கட்சியின் மாநில பொதுச்செயலாளர் நிஜாம் முகைதீன் தலைமையிலும், மாநில செயலாளர்கள் அமீர் ஹம்சா, ரத்தினம், மாவட்ட தலைவர் முகம்மது ரஷீத், மாவட்டப் பொதுச் செயலாளர் ஏ,கே கரீம் ஆகியோர் முன்னிலையிலும் நடந்தது. இந்த மனித சங்கிலி போராட்டத்தில் திரளானோர் கலந்துகொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோசமிட்டனர்.
“வஞ்சிக்கப்படும் வட சென்னை”- எஸ்.டி.பி.ஐ கட்சி நடத்திய மனித சங்கிலி போராட்டம்!
Reviewed by நமதூர் செய்திகள்
on
02:20:00
Rating:
No comments: