வி.களத்தூரில் பிளாஸ்டிக் உபயோகத்தின் தீய விளைவுகளை எடுத்துச் சொல்லும் வாகன பிரச்சாரம்


தமிழ்நாடு அரசு சுற்றுச் சூழல் துறையும் திருநெல்வேலி அரும்புகள் அறக்கட்டளையும் இணைந்து நடத்தும்  பிளாஸ்டிக் உபயோகிப்பதால் ஏற்படும் தீமைகளை வாகனம் மூலம் தமிழ்நாடு முழுதும் பிரச்சாரம் செய்து வருகின்றனர்.
கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் தொடங்கிய இந்த பிரச்சாரம் இந்த வருடம் மார்ச் வரை தொடர இருப்பதாக வாகனப்பிரச்சாரத்தில் வந்திருந்த சகோதரர் கூறினார். மேலும் இதுப்போல் ஒவ்வொரு கிராமம் மற்றும் நகர்புறங்களில் தங்களது பிரச்சாரம் தொடர இருப்பதாக கூறினார். அதன் ஒரு பகுதியாகத்தான் உங்கள் ஊரிலும் இந்த  பிளாஸ்டிக் உபயோகத்தின் தீய விளைவுகள் பற்றிய பிரச்சாரம் செய்கின்றோம் என்று கூறினார்.
நேற்று (14.02.2014) மாலை 5 மணியளவில் நமது வி.களத்தூரில் பஸ்நிலையத்தில் இந்த பிளாஸ்டிக் உபயோகத்தின் தீய விளைவுகள் பற்றிய பிரச்சாரம் செய்தனர். அப்போது துண்டு பிரசூரமும் வினியோகிக்கப்பட்டது. அதில் பிளாஸ்டிக் உபயோகத்தை குறைக்க வேண்டி வாசகங்கள் இடம்பெற்றிருந்தது.
நன்றி : கல்லாறு.காம் 




வி.களத்தூரில் பிளாஸ்டிக் உபயோகத்தின் தீய விளைவுகளை எடுத்துச் சொல்லும் வாகன பிரச்சாரம் வி.களத்தூரில் பிளாஸ்டிக் உபயோகத்தின் தீய விளைவுகளை எடுத்துச் சொல்லும் வாகன பிரச்சாரம் Reviewed by நமதூர் செய்திகள் on 22:28:00 Rating: 5

No comments:

Powered by Blogger.